கொஞ்சும் உணர்வுகள்

அறைவிட்டு எங்கும் செல்லாத நான்,
அதிசிய கனவாய் பயணம் சென்றேன் பெற்றோருடன்,
அலைகடல் அழகினைக் காண,
ஆனந்தமாய் புறப்பட்டு பேருந்தில் ஏறி,
அமர்ந்தேன் கிடைத்த உட்புற இருக்கையில்,
அருகிலோ ஒரு குழந்தை என்னை நோக்க,
அன்போடு மெலிதாய் சிரித்தேன் சத்தமின்றி,
அவனின் பார்வையோ சற்றும் நீங்காது,
அல்லிவிழி மூடாது என்னையே பார்த்தான் - காற்றி சிறிதாய்
அசைந்தாடிய என் தாவணியை பிடித்தவாறு,
அமுத மொழியாய் வணக்கம் என்றான்,
அடுத்தநொடியே நானும் பதில் வணக்கம் கூறினேன் இருக்கை கூப்பி,
அழைத்தபடி கை அசைத்து தூக்குமாறு அவன் கூற,
அமர்ந்த்தினேன் என் மடியினிலே,
அடிக்கும் காற்றோடு வேடிக்கை நான் காட்ட,
அமிழ்ந்தான் தூக்கத்திலே - அவன்
அன்னை அதை கண்டு,
அவர் கரம்வாங்கி உறங்க செய்தார்,

கண்விழி மூடி அவன் உறங்க - என்
கண்ணான கணவர் நினைவு நெஞ்சை துளைக்க,
கண்ணோடு மகிழ்ச்சியின் ஒளியும்,
கன்னி இதழோரம் மெல்லிய மலர்ந்த புன்னகையும்,
காற்று தீண்ட ,மரங்களும் - இனிய
கனிகளும்,பசுமையான இயற்க்கை வளங்களும்,
காட்சிகளாய் சன்னல் வழியே கண்டேன்,
கனவாய் பூ உலகாய் கவிப்பாட தோன்றியது,
கலையும் மேகம்போல,
கனவின் அலைகளது மாயமானது,

பேருந்தின் ஓட்டுனர் அழுத்திய திடீர் நிறுத்தத்தால்,
பயணம் அது மீண்டும் மிதமாக மாறியதும்,
பாவை நெஞ்சம் கனவில் நுழைந்தது,
பாதுகாப்பாய் அருகில் உள்ள கம்பியை பிடித்தபடி,
பார்வைகளால் படம் எடுத்தேன் கண்ட இயற்க்கை காட்சிகளை,
பசுமையான காட்சிகளும் இதமான காற்றும் உரச,
பஞ்சுமெத்தையென பிடித்திருக்கும் கம்பியில் கண்மூடி சாய்ந்தேன்,
புதுயுகம் சென்றேன் நினைவும் கனவும் அவரோடு,
பிடித்திருக்கும் கம்பி அவர் கைப்போலும்,
பதிந்து சாய்ந்திருக்கும் தலை அவர் மார்பினிலே,

சில்லென்று காற்று அவர் மூச்சுக்காற்றை போலும்,
செல்லும் பேருந்தில் போடப்பட்டுள்ள பாடல்,
செந்தமிழினில் அவர் கூறும் கவிதைப்போலும் எனை உருக்க,
சிரிப்போடு சிவந்தேன் சிலிர்தெளுந்தேன்,
சேருமிடம் வந்ததும்,இறங்கி மெல்ல அடியெடுத்து,
சுற்றி பார்த்தவாறு நடந்தேன் கடல் மணல்தனலே,
சட்டேன்று நின்றேன் கண்ட ராட்டினதினால்,
சுற்றும் ராட்டினம் நெஞ்சை இழுக்க,
சிறு பிள்ளையென இதயம் துள்ளி அமர்ந்தேன்,
ஊசல் மாட்டியுள்ள ராட்டினத்தில்,
உடன் பிறவா உறவான சகோதரியும் அமர்ந்தால் அருகினிலே,
உள்ளமோ ராட்டின மகிழ்ச்சி கலந்த பயத்தினில் நிறைந்திருக்க,
உறுதியாக பற்றிக்கொண்டேன் தொங்கும் சங்கிலியினை,
ஊசல் ராட்டினத்தினை இழுக்க,
உயர இழுத்து செல்லும் வண்ணம் பயத்தின் அதிகரிப்பால்,
ஊமையான என் மௌனம்,
உடைந்து சிரித்தபடி அலறினேன்,
உரக்க குரல் எழுப்பி வேகம் குறைக்க நான் கூற,
உயிர் அது எங்கோ சென்று வந்தார் போல் மூச்சுக்கொண்டேன்,
உற்சாகம் அதிகரிக்க ஆடிய ஊசல் முடிந்து,
உலகில் மிக பிடித்ததும்,பயபடுவதுமான கடலினை காண விரைந்தேன்,

கடலினை கண்டேன் அட ! என்ன ஓர் படைப்பு,
" களிப்பான நெஞ்சம் கவிப்பாடும் கொஞ்சம்,
கவலைகொண்ட நெஞ்சம் இசைவாடும் தஞ்சம் "
கரைந்தேன் முற்றிலுமாய் ஓடி சென்று,
கள்ளம் கபடமற்ற குழந்தைப்போல மாறி விளையாடினேன்,
கவலை அது தீண்டுமோ ?
களிப்பாய் விளையாடினேன் கடல் அலையோடு,

மலர் வனமாய் மனம் மலர்ந்தாட,
மனம் முழுதும் அவர் கனவின் வழியே குடி புகுந்தார்,
மன்னவன் நினைவு என்னுள் நிறைய,
மொட்டு மலரும் இனிதாய்,
மௌனத்தில் அமிழ்ந்தேன் அலைகடல் கண்டவாறு உறைந்தேன் !!!

கரமொன்றை பிடிக்க
காத்திருக்கும்
காதல் மனது !!!!

எழுதியவர் : ச.அருள் (14-Feb-16, 1:51 am)
பார்வை : 306

சிறந்த கவிதைகள்

மேலே