தங்கைக்கு திருமண வாழ்த்து

தேனுக்கும்
வண்டுக்கும்
தேன் நிறைந்த
பூவுக்கும்

வண்ணத்து
பூச்சிக்கும்
வண்ணம் தந்த
சோலைக்கும்

கோளுக்கும்
யாழுக்கும்
ஓசை தந்த -இசை
வாணிக்கும்

வெள்ளியை
உருக்கியது போல்
வழிந்தோடும்
அருவிக்கும்

சூரிய உதயத்தின்
நீட்சியை
உறிஞ்சுகின்ற
நிலவுக்கும்

ஓடுகின்ற
முகிலுக்கும்
கூவுகின்ற
குயிலுக்கும்

வானுக்கும்
மண்ணுக்கும்
ஒளியூட்டும்
சக்திக்கும்

ஊனுக்கும்
உயிருக்கும்
உயிர் சுரக்கும்
விண்ணுக்கும்

சொல்கிறேன்
கேளுங்கள்

இருமனம் சேரும்
திருமண பந்தத்தில்
நெருக்கத்திலும்
சின்னஞ்ச்சிறு பிரிவிலும் -செல்லமாய்
சீண்டி சிணுங்கும் உறவிலும்....
குலம் தழைக்க உருவாகிடும்
கருவிலும்....
விழியிலும் விழிமூட கனவிலும்....
துயிலும் மடியிலும்
எண்ணிடும் மனதிலும்
இதயத்தின் துடிப்பிலும் ....
கண்ணிலும் கருத்திலும்
கணினித்திரையிலும் .....
மண்வாச பொழுதிலும்
மனைவாசல் முழுதிலும்
மோகமெனும் யோகத்தில் தொடங்கி
காதெலெனும் தியானத்தில் நிறைந்து
நெருக்கத்தின் நீட்சியாய்
பிரபஞ்சத்தின் சாட்சியாய்
நீடுடி நிறைமனதாய் உடல்நலமும்
நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம்
பெற்றே வாழுங்கள் வாழுங்கள்
என்றே .....

வாழ்க வளமுடன்
என்று

வாழ்த்துவோம்
வாருங்கள் .......


அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (14-Feb-16, 1:37 am)
பார்வை : 4386

மேலே