தொண்டைப் புற்றுநோயால் பேசும் சக்தியை இழந்தவர்களுக்கு உதவியாக, புதிய குரல் கருவியை பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் கண்டுபிடிப்பு
தொண்டைப் புற்றுநோய் காரணமாக, குரல் நாண்கள் பாதிக்கப்பட்டு பெரும்பாலானோர் பேசும் ஆற்றலை இழந்து விடுகின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் விஷால் ராவ் என்பவர் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 'ஓம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கருவி, 50 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த மருத்துவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டுவதால், குறைந்த விலையில் இந்தக் கருவியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். விலை மலிவாக இருந்தபோதிலும், இதன் தரம் மேம்பட்டதாக இருக்கும் என்றும் மருத்துவர் விஷால் ராவ் தெரிவித்தார். புற்றுநோய் மட்டுமின்றி, நரம்புகள் பாதிக்கப்பட்டு பேசமுடியாமல் போன நோயாளிகளுக்கும் இந்தக் கருவி மிகவும் உதவிகரமாக இருக்கும்