மௌனம்
சுட்டெரிக்கும் சூரியனானாலும்
உன் முகம் பார்த்து
வெட்கத்துடன் மலர்கின்றனவே
தாமரைகள்...!
உன் கதிர் கரங்களை நீட்டி
மென்மையாக தீண்டுவதால்
தானோ தாமரைக்கு
அத்தனை சிவப்பு...!
நீங்கள் இருவரும்
மௌனத்துடன் உங்கள்
எண்ணங்களை
பரிமாறிக் கொள்கிறீர்களே...!
அதனால் தான் என்னவோ
காதலர்களுக்கிடையே
தோன்றும் மௌனமும்
சுகமாய் இருக்கின்றது...!