ஆதலினால் காதல் செய்வீர் --- வஞ்சிப்பா
ஆதலால் காதல் செய்வீர் --- வஞ்சிப்பா---- மரபுப்பா
மதியெனமுகம் சிவந்திடும்படிப்
பதியெனைநினைப் பரவசமெழக்
கதியவளெனக் கனவிலுமனம்
விதிவழிச்செல விரைந்திடும்படிக்
கவிமகளவள் இமைதிறந்திடச்
செவிவழிமொழி சிறந்திடுமென
சிரிப்பொலியெழ மயங்கியும்விழ
உரிப்பொருளென எனதருகினில்
நின்ற
என்றன் காதலி எனதுயிர் நிலவாய்
நின்றாய் நெஞ்சினில் நிதமும் நிற்க
உன்றனின் பெயரே உள்ளமும் எழுதும்
அன்பின் ஊற்றுபோல் அருகில்
கன்னி நீயும் காதலால் மயங்கியே !!!
( நேரிசை ஆசிரிய சுரிதகம் )