தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து19---ப்ரியா

வசந்த் தன்னை ஏமாற்றப்பட்டதை அறிந்து ரியா இருக்குமிடத்துக்கு வந்து அவளை திட்டுகிறான்.......ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு எல்லாம் என் தோழி வந்தனாவுக்காகதான் என்று கூறுகிறாள்......எந்த வந்தனா? உன் தோழி எதற்காக என்னை உன் மூலமாக பழி வாங்கணும் என்று புரியாமல் கேட்டான் வசந்த்....??

ஒன்றும் புரியாதது போல் நடிக்காதே......உன் காதலி அதாவது என் தோழி வந்தனாவுக்காகத்தான் இப்படி பண்ணினேன் என்று மறுபடியும் ஆக்ரோஷமாய் கத்தினாள் ரியா...

வசந்தால் அவனது கோவத்தை அடக்க முடியவில்லை நேரே ரியாவிடம் சென்று அவள் தலை முடியை பிடித்து தரதரவென்று இழுத்து சென்றான் விஜய் மற்றும் கீது அவன் பின்னாலேயே ஓடினர்.....வலி தாங்க முடியாமல் "என்னை விடு விடு..."என்று கத்தினாள் ரியா, விஜய் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை அவ்வளவு கோவமாய் இருந்தான் வசந்த்....!

கீதுவின் வீடு வரைக்கும் இழுத்து சென்றான் அங்கு கீதுவின் குடும்பத்தார் இந்த நிலையை பார்த்து அதிர்ந்தனர்.

என்னம்மா என்ன ஆச்சி...... டேய் கைய எடுடா..நீ யாருடா? என்று அவர்கள் கத்த...... கையை எடுத்தான்.

எங்கடி உன் தோழி, என் காதலின்னு சொன்னியே அந்த நாயகிய கூப்பிடு நானும் பார்க்கிறேன் உண்மை என்னன்னு தெரிஞ்சிப்போம் என்று கத்த அனைவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்...??

"வந்தனா வந்தனா" என்று அழைத்துகொண்டே உள்ளே சென்றாள் வந்தனாவைக்காணவில்லை?

அம்மா வந்தனா எங்கே?என்று அப்பாவியாய் புரியாமல் விழித்தாள் ரியா,கீதுவுக்கும் புரியவில்லை..?

இப்போதான்மா இங்க இருந்து கிளம்பினா ஏதோ முக்கியமான விஷயம் உடனே புறப்படணும் கீது ரியாக்கிட்ட சொல்லிருங்கன்னு சொன்னா அப்புறம் இந்த டையரிய உன்கிட்ட தர சொன்னா என்று சொல்லிக்கொண்டே தனது கையிலிருந்த வந்தனாவின் டயரியை ரியாவின் கையில் கொண்டு கொடுத்தார் கீதுவின் அப்பா....?

அதை வாங்கிப்படித்த ரியாவுக்கு தலையே சுற்றியது மயக்கம் மட்டும்தான் வரவில்லை.....யாரோ தன் உடம்புக்கு எந்த சேதமுமின்றி உயிரை மட்டும் உருவி எடுப்பதை போன்ற ஒரு உணர்வை உணர்ந்தாள் கண்களில் நீர் துளிகள் கண்ணை மறைத்தன பூமியை நனைத்துக்கொண்டிருந்தது துளிகள்..........!

அதை அவள் கையிலிருந்து வாங்கினால் கீது கிட்டத்தட்ட அவளுக்கும் இதே நிலைதான்.....

அந்த கடிதத்தில்.......

"அன்புள்ள என் தோழிகளுக்கு என் கடைசி கடிதம், இனி என்னை உங்களால் கண்டுபிடிக்க முடியாது இந்த இடத்தை விட்டே செல்கிறேன், இரண்டு பேரும் என் மேல் வைத்திருந்த பாசத்திற்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது.....மிகவும் மகிழ்ச்சி,
எனக்கு மிகப்பெரிய உதவியை செய்த ரியாவுக்கு மனமார்ந்த நன்றிகள், உண்மையில் உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை இந்த ஜென்மத்தில் பதிலுதவி என்னால் செய்ய முடியாது என்னை மன்னித்துவிடு ரியா.

எனது உண்மைக்காதலன் பெயர் பிரதீக் நாங்கள் இருவரும் உண்மையாய் உயிருக்குயிராய் காதலிக்கிறோம் அவரின் பரம எதிரிதான் வசந்த்...
என் காதலனின் வயதுதான் வசந்த்க்கும் இருவரும் சேர்ந்து தான் தொழில் செய்து வந்துள்ளனர் ஆனால் இடையில் நடந்த சிறு பிரச்சனைகளால் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து தனித்தனியாக தொழில் புரிந்துவந்தனர் ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் பிரதீக்கால் வசந்த் அளவுக்கு உயரமுடியவில்லை அதான் இந்த ஏற்பாடு.........நானும் பிரதீக்கும் பிளேன் பண்ணிதான் உன்னை இதில் ஈடுபடுத்தினோம், வசந்தால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று தெரிந்துதான் அனுப்பினேன்.

நீயும் நல்ல படியாக காரியத்தை முடித்து தந்தாய் இனி நான் இங்கு இருந்தால் அனைவருக்கும் பிரச்சனைதான் வசந்தின் புது மற்றும் பழைய வடிவமைப்புகள் அனைத்தும் பிரதீக் பெயருக்கு வசந்தே மாற்றி தந்துவிட்டதாக அந்த கையெழுத்திட்ட பேப்பரில் பதிவு செய்து ஒரே நாளில் அனைத்தையும் பக்காவா முடித்துவிட்டோம்.......நீ இந்த லெட்டரை படிக்கும் போது நான் எங்கேயோ இருப்பேன் என்னை தேட வேண்டாம்.

என்னால் உனக்கு இனி ஏதாவது பிரச்சனை என்றால் என்னை மன்னித்து விடு ரியா. கீது ஊரில் வைத்து நாம் இப்படி பிரிவோம் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என் காதலனுக்காக நான் நடத்திய நாடகங்களே இவை அனைத்தும்..............என்று முற்றுப்புள்ளியுடன் கடிதத்தை முடித்திருந்தாள்........!

கீதுவின் மொத்த குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் ரியாவுக்கோ தன் தலையில் தானே அம்மிக்கல்லை தூக்கி போட்டது போன்றதொரு உணர்வு அவளது குற்ற உணர்வால் வசந்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் நின்றாள்.......

ஆவேசம் பொறுக்க முடியாத வசந்த் "பார்த்தியாடி உன் தோழியோட நாடகம்....அதுக்கு உடந்தையா இருந்து நீ எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே" என்று மிரட்டும் வில்லன் குரலில் அலறினான்.

உன்ன விடமாட்டேன் எங்க போனாலும் சரி உன்னையும் அந்த வந்தனா மற்றும் பிரதீக்கையும் அழிக்காம விடமாட்டேன் "இது உன்மேல் சத்தியம்"என்று ரியாவின் தலையில் அடித்து சத்தியம் பண்ணினான்.

சுற்றியிருந்தவர்கள் "அவள் செய்த தவறுக்கு இவள் என்ன பண்ணுவாள் பாவம் ஒன்றும் அறியாத பொண்ணு" என்று இவளுக்கு ஆதரவு சொன்னார்கள்......"இரண்டு பேரையும் என் சொந்த பொண்ணு மாதிரியே தான் பார்த்தோம் இப்படி இந்த பொண்ணோட வாழ்க்கையில மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு போயிட்டாளே இரக்கமற்ற நெஞ்சழுத்தக்காரி" என்று சொல்லி கீதுவின் அம்மா கண்கலங்கினார்.

ஆனாள் ரியாவோ மனதை திடப்படுத்திக்கொண்டு அவனருகில் சென்றாள்........

தவறு செய்தது நான்தான் அதற்காக நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் எனக்கு ஏதாவது தண்டனைக்கொடுங்கள் என்று அழுதுகொண்டே அவனது காலில் விழுந்தாள்.

அமைதியாக நின்றவன்..........திடீரென ஒரு முடிவுக்கு வந்தவனாய் சிரித்துக்கொண்டே இப்பொழுதே உனக்கு தண்டனை கொடுக்கிறேன் என் தண்டனையை ஏற்றுக்கொள்ள நீ தயாரா?என்று கேட்டான் அவனது கேள்வியில் ஒரு வித நகைப்பு தெரிந்தது......

சிறிதும் யோசிக்காமல் நீங்கள் என் உயிரைக்கேட்டாலும் தருகிறேன் என் உயிரை எடுக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு அழுகுரலிலே சொன்னாள் ரியா???????

அப்படியென்றால் நீ என் மனைவியாகி விடு என்றான் வசந்த்.......??????

அனைவரும் அப்படியே திகைப்பில்....?


தொடரும்......!!

எழுதியவர் : ப்ரியா (17-Feb-16, 12:02 pm)
பார்வை : 422

மேலே