நீ வரும் வரை-12

(முன்கதை சுருக்கம் -ப்ரீத்திக்கு பிரியாவும், ரவியும் காதலிக்கவில்லை,தன் முன்னே நடித்துகொண்டிருக்கின்றனர் என்ற உண்மை ஏற்கனவே தெரிந்துவிட்டது....அதை அவர்கிளடமே ப்ரீத்தி போட்டு உடைக்க இருவரும் திகைத்து நின்றனர்...ப்ரீத்தியிடம் ரவி மன்னிப்பு கேட்க, ரவியிடம் ப்ரீத்தி மன்னிப்பு கேட்க...இருவருமாக ப்ரியாவிடம் மன்னிப்பு கேட்க பிரச்சனை சுமுகமாக தீர்ந்தது...)

ரவி தன் நண்பர்களை அழைக்க வெளியே சென்றான்...

ரவி வருவதை பார்த்த அவனது நண்பர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் ஒரே நேரத்தில் பல கேள்விகளை கேட்டு ரவியை உலுக்கினர்...

என்ன ஆச்சுடா, அவ நம்பிட்டாளா?

அப்போ நாம கிளம்பலாமா? ஆமா பிரியா எங்க? அவள ஏன் கூட்டிட்டு வரல?..

.......???????????.............இப்படியே மாறி மாறி கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்டர்வர்களை இடைமறித்து

ஒரு நிமிஷம் என்ன பேச விடுங்க என்று ரவி நடந்தவற்றை எல்லாம் கூற வியப்பும், அதிர்ச்சியுமாக ரவி, பிரியாவின் நண்பர்கள் அவன் கூறியவற்றை எல்லாம் கேட்டுகொண்டிருந்தனர்....

சரி எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு, எதுக்கு நீங்க வெளியவே இருகிங்க..வாங்க உள்ள போகலாம் என்று எல்லாரையும் உள்ளே அழைத்து சென்றான் ரவி...அவர்கள் உள்ளே வந்த போது பிரியாவும், ப்ரீத்தியும் சகஜ நிலைமைக்கு வந்ததோடு, ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்ததை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது...

பிரியா நீ இப்படி சிரிக்கறதா பார்க்கறப்ப சந்தோஷமா இருக்குடி என்று ரேணு சொல்ல...

ஆமா இப்போ தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சி எல்லாரும் நிம்மதியா இருக்கோம் என்று கீது தன் பங்குக்கு ஒரு கருத்தை கூற ரொம்ப பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடிச்ச நம்ப கீதுவுக்கு ஒரு ஒ..போடுங்க என்று தினேஷ் கிண்டல் செய்ய ஆரம்பித்தான்...
ஆமா ஆமா நீங்க தான் சைண்டிஸ்ட் ஆச்சே, உங்களை விட நாங்க பெரிய கண்டுபிடிப்பு எல்லாம் கண்டுபிடிக்க முடியுமா, அதான் பார்த்தோமே இவங்கள பாலோ பண்ண நீங்க கண்டுபிடிச்ச ரூட்ட , விட்ருந்தா நேரா இமயமலைக்கே கூட்டிட்டு போயிருப்பாங்க...அவ்ளோ கன்ப்யூஷன் பண்ணிடாங்க என்று பதிலுக்கு கீது தினேஷ் காலை வாரிவிட இப்படியே பார்ட்டி கலகலப்பாக போய்கொண்டிருந்தது....இவர்களெல்லாம் ஒருபக்கம் பேசி கொண்டிருக்க ப்ரீத்தி, பிரியாவை தனியாக அழைத்து கொண்டு வந்தாள்...

பிரியா நடந்ததுக்கெல்லாம் மறுபடியும் ஒரு முறை சாரி கேட்டுக்கறேன் என்று ப்ரீத்தி தன் சாரி புராணத்தை ஆரம்பிக்க...
அம்மா தாயே போதும் என்ன விட்ரு....என் காதே வலிக்குது என்று சிணுங்கியபடியே கிண்டல் செய்தவளை பார்த்தபடியே ப்ரீத்தி நின்றுவிட்டாள்..

என்ன ஆச்சு...அப்படியே சிலை மாதிரி நின்னுட்ட, ஹலோ என்று ப்ரீத்தியின் முகத்தின் அருகில் கையை அசைத்து அவளை நடப்புலகத்துக்கு கொண்டு வந்தாள் பிரியா...

என்ன ஆச்சு ப்ரீத்தி...
ஒன்னும் இல்ல சின்ன யோசனை அவ்ளோ தான்...
திடிர்னு என்ன அவ்ளோ சின்ன யோசனை, என்னனு சொல்லு என்று பிரியா அடம்பிடிக்க..பிரியா இப்போ நடந்ததெல்லாம் உண்மையா இருந்துருக்கலாம்னு நினச்சேன் என்று ப்ரீத்தி தன் யோசனையை கூற ஆரம்பித்தாள்...

எத சொல்லற எனக்கு புரியல என்று புரியாமல் விழித்தவளுக்கு தெளிவாக கூற ஆரம்பித்தாள்...

நீ ரவி லவ்வர்னு சொன்னது, அப்புறம் ரெண்டு பெரும் மோதிரம் மாத்திக்கிட்டது இது எல்லாம் உண்மையா இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ல என்று ப்ரீத்தி தன் விருபத்தை கூற...
போதும் போதும் என்று அவளை இடைமறித்து கொண்டு,என்ன ப்ரீத்தி இப்படி சொல்ற, அது உண்மையா இருக்க வாய்ப்பே இல்ல... ரவிக்கும் எனக்கும் ஒத்தே வராது...இது எல்லாம் வெறும் ட்ராம தான், நீ மனச போட்டு குழப்பிக்காத, அது மட்டும் இல்ல ரவிய எனக்கு பிடிக்கல...
அவன் நடந்துக்கிட்ட விதம் எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல என்று பிரியா கூறியதிலிருந்து ரவி மேல் பிரியாவுக்குள் சின்னதாய் வெறுப்பு இருப்பதை ப்ரீத்தி புரிந்துகொண்டாள்...

பிரியா நீ நினைக்கறமாதிரி ரவி இல்ல, அவன் எவ்ளோ நல்லவன்னு எனக்கு நல்லாவே தெரியும்...அவனுக்கு எவ்ளோ நல்ல மனசு தெரியுமா...யாருக்காவது உதவி வேணும்னா உதவி செய்ற முத ஆளா ரவி தான் இருப்பான்...அவங்களுக்கு இருக்க சொத்துக்கு அவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், ஆனா எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டு, சிம்பில்லா எந்த பந்தாவும் இல்லாம இருக்கானே அதுக்கு காரணம் அவன் நல்ல மனசு தானே...

அதே மாதிரி அவனுக்கு தப்பு பண்ணா பிடிக்காது, முக்கியமா திருடறது பிடிக்காது...கஷ்டம்னு யாராவது பணம் கேட்டா மறுக்காம குடுப்பான்...அதுவே அவனுக்கு தெரியாம எடுக்கணும்னா அது முடியாத காரியம்...அத அவன் மன்னிக்க மாட்டான்...உன் விஷயத்திலயும் அது தான் நடந்துருக்கு, நீங்க சந்திச்சது அப்படிப்பட்ட சூழ்நிலையில தான், அதனால தான் அவன் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டான் என்று ப்ரீத்தி சொல்ல நடந்தவற்றை எண்ணி பார்க்கும்போது பிரியாவுக்கும் ப்ரீத்தி சொல்வது தான் சரி என்றுபட்டது... அவனுக்கு பிடிக்காத திருட்டு அவனுக்கே நடந்த சமயத்தில் அந்த திருட்டுக்கு துணைபோவது போல் பிரியா செய்த உதவியும் மாறிவிட அப்படிப்பட்ட சூழ்நிலை பிரியாவுக்கும் ரவிக்குமான முதல் சந்திப்பாய் அமைந்ததே இருவருக்கிடையேயும் இப்படிப்பட்ட கசப்பும் வெறுப்பும் உருவாக காரணமாய் அமைந்துவிட்டது..

ப்ரீத்தி மேலும் ரவியின் நல்ல குணங்களை பற்றி ஒவ்வொன்றாய் கூற பிரியாவின் மனதில் ரவியின் மீதான வெறுப்பு மறைந்து விருப்பம் உருவாக ஆரம்பித்துவிட்டது...

இதுக்கு எல்லாம் மேல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு...ரவியோட அப்பாவோ ரவிய தன்னோட பிஸினச பாத்துக்க சொல்லி ரொம்பவே கட்டாயபடுத்தினாரு...அவங்க அம்மா ரவி தன் கூடவே இருக்கணும்னு ஆசபட்டாங்க...அதனால தான் ரெண்டு பேருமா சேர்ந்து எனக்கும் ரவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல ரொம்பவே தீவிரமா இருந்தாங்க...எனக்கும் ரவினா பிடிக்கும், அவன பத்தின எல்லாமே எனக்கு தெரிஞ்சதால இப்படி ஒரு புருஷன் எனக்கு அமையறது என்னோட லக்னு நினச்சி நானும் ஓகே சொல்லிட்டேன்...

ஆனா ரவிக்கோ இது எல்லாத்தையும் விட அவனோட லட்சியமும், எல்லாருக்கும் சேவை செய்யனும்ங்கர எண்ணமும் தான் பெருசா இருந்துருக்கு...அதனால தான் அவன் என்ன செய்றோம்னு கூட யோசிக்காம இப்படி என்கிட்ட பொய் சொல்லி நடிச்சிருக்கான்...பராவயில்ல, ரவி எனக்கு எப்பவும் நல்ல நண்பன் தான்..அதுவே போதும்னு நினைக்கிறேன்...என்று ப்ரீத்தி ரவியின் புகழை முழுவதுமாக பாடி முடிக்கவும் ரவி பிரியாவின் மனதில் ஆணி அடித்ததை போல் முழுவதுமாக நிறைந்து காதல் எனும் பூ பூக்கவும் சரியாக இருந்தது...

எல்லாரும் கிண்டலும் கேலியுமாக சந்தோஷமாக இருக்க பிரியாவுக்கோ ரவியை பார்ப்பதும் அவனை ரசிப்பது மட்டுமே முழு வேலையாகி போனது...கீதுவை தவிர பிரியாவின் இந்த மாற்றம் வேறு யாருக்குமே புரியவில்லை, எல்லாரும் பார்டியை என்ஜாய் செய்வதிலேயே மூழ்கி போனார்கள்..

இப்படியே பார்ட்டியும் முடிவடைந்து அனைவரும் அங்கிருந்து கிளம்பும் தருணமும் வந்தது...ரவி சிறிது நேரத்தில் தன்னை விட்டு பிரிந்து போக போகிறான் என்று நினைக்கும் போதே பிரியாவின் கண்களில் இனம் புரியாத ஒரு வலி கண்ணீரை தேங்க செய்து விட்டது..

பிரியா உனக்கு என்ன ஆச்சுடி, உன் கண்ணெல்லாம் அழுத மாதிரி சிவந்து இருக்கு...உண்மைய சொல்லு, என்ன ஆச்சுன்னு சொல்லு என்று மனதளவில் பலவீனமாகி நொந்து போய் இருந்த பிரியாவை தனியாக அழைத்து வந்து கீது விசாரிக்க...

அதலாம் ஒன்னும் இல்லடி என்று எவ்வளவு மழுப்பினாலும் விடாபிடியாய் உண்மையை சொல்லியே தீரவேண்டும் என்று கேள்விகேட்ட கீதுவை சமாளிக்க முடியாமல் தன் மனதில் புதிதாய் ரவி மேல் மலர்ந்திருக்கும் காதலை பற்றி பிரியா கூறி விட்டாள் ..
இதுக்கு ஏண்டி அலற, உன் மனசுல அவன் தான் இருக்கான்னா, போய் உன் காதல சொல்லு..என்று வெகு எளிதாக கீது கூற பிரியாவோ எப்படி கூறுவது என்று தெரியாமல் உடலெல்லாம் நடுங்க உள்ளம் பதட்டத்தில் திக்குமுக்காட காதல் நோயில் சிக்கி நின்றாள்...
எப்பொழுதும் இப்படி தானே, காதல் நோயில் சிக்கும் வரை தைரியம் கொம்பை போலே தலைக்கு மேலே தகதிமி ஆடிகொண்டிருக்கும், சிக்கி கொண்டால் அதை சொல்வதற்குள் காதல் கொண்டவரை எலும்புருக்கி நோயை போல உருக்கி ஒரு வழியாக்கிவிடும்...

பிரியா என்ன யோசிக்கிற போய் சொல்லுடி, இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க கிளம்பிடுவாங்க என்று கீது அவளை உசுப்பேத்திவிட்டு கொண்டிருந்தாள்..
பிரியா எவ்ளோ ட்ரை பண்ணியும் அவளுக்கு தெரியம் வரவில்லை...கடைசியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனிடம் சொல்லியே தீர வேண்டும் என்று அவனை தேடி கொண்டு சென்றால் பிரியா...
எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று முன்னாள் சென்ற பிரியாவை பார்த்தபடியே கடவுளை வேண்டி கொண்டாள் கீது.....

எழுதியவர் : இந்திராணி (17-Feb-16, 3:13 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 281

மேலே