நாம் ஒவ்வொருவரும்
வீட்டுக் குப்பை வீதியிலே,
குப்பைத் தொட்டி அருகினிலே,
காற்றில் பறந்து செல்லுதடா,
நாசியில் நுழைந்து கொள்ளுதடா!!!
ரோமம் தடுக்கப் பாக்குதடா,
சிக்கி நுரையீரலைக் கொல்லுதடா,
இரண்டடி நடக்கும் சுமைதானடா,
நுகரமுடியாமல் நுரையிரல் தவிக்குதடா!!!
----------------------------------------------------------------------
விதிகள் இல்லையென பொருமுகிறான்?
மண்ணில் புதைத்துச் சுற்றுகிறான்.
உள்ளதை பின்பற்ற மறுக்கிறான்,
புதிய விதிகளை தேடுகிறான்.
மதி,
விதிகளில் ஓட்டையை தேடுதடா,
விதியையே மாற்ற நினைக்குதடா!!!
பள்ளம் தேடும் வெள்ளமடா,
மாற்றமே நினைக்குது உள்ளமடா.
----------------------------------------------------------------------
சுமைதாங்கி தலைவன் ஆனானடா,
சுகம்மட்டும் பகிர விழைத்தானடா,
சுமையின் வழியை அடைத்தானடா,
சுமக்கும் வழிசொல்ல மறந்தனடா.
சேமிக்கும் இன்பம் இழந்தானடா,
எதிர்பாற்பின் அருமை தொலைத்தானடா,
சேவிக்க வேண்டியது பெற்றோரடா,
சேவிப்பதுவே இன்று பெற்றோரடா.
-----------------------------------------------------------------------
புத்தக வாசனை புதைத்தானடா,
புதைக்குழி யோசனை நிறைத்தானடா ,
பூக்களின் புத்துயிர் மறந்தானடா,
பூவையை இரசிக்க நேரம் இல்லையடா,
கால்களின் சிநேகம் மண்தானடா,
தொடுதிரைக்கு விரல்களை விற்றானடா,
வழிமறந்து வீதியில் நடந்தானடா,
காலிடறி மண்சிநேகம் கொண்டானடா,
எழுந்து வழிதேடி அலைந்தானடா,
தொடுதிரையில் தேட முயன்றானடா,
விழுந்ததில் திரை உடைந்ததடா,
வழிகேட்க மொழிகூட உதவலடா,
தேடியலைந்து நிலையமொன்று கண்டானடா,
வழிதேடி விழிநிரப்பி கொண்டானடா,
கால்களின் சிநேகம் அறிந்தானடா,
வால்பிடித்து நெடும்தூரம் நடந்தானடா,
உடைகுறைப்பு இன்று விருப்பமடா,
எடைக்குறைப்பு பொழுதுபோக்காய் போனதடா,
கூடுகளை காடுகளில் தொலைதோமடா,
காடுகளை வீடுகளில் புதைத்தோமடா,
கூடுகளாய் அடுக்குமாடி விதைத்தோமடா,
குறுகிநிற்க வழிமுறைகள் கண்டோமடா,
வழிமுறைகள் பெருமைகளாய் சிரித்தோமடா,
வெட்கம் மறந்து மானுடராய் திரிகிறோமடா!!!
இரா நவீன் குமார்