ஆரம்பமும் - முடிவும்
ஆரம்பம்
பிறப்பையும் இறப்பையும் வைத்தான்
அதனுள் வாழ்க்கையை திணித்தான்
கருவினில் நுழைந்து மழலையில்
தவழ்ந்து பருவத்தின் வாசலை கண்டேன்.
பருவம்
அங்கு என்னைப் போல் பலரையும் பார்த்தேன்
ஆசைகள் தீர திளைத்தேன்
எந்த கவலையும் இல்லாமல் திரிந்தேன்
இதுதான் வாழ்க்கை என்று மகிழ்ந்தேன்.
உறவு
உடன் பிறந்தவர்கள் அன்பில் நனைந்தேன்
இது அப்படியே தொடர வேண்டினேன்
குடும்ப அக்கறையில் நானும் மூழ்கினேன்
என் நினைப்பும் சரியெனே நினைத்தேன்.
காதல்
காதலின் கிளர்ச்சியில் வீழ்ந்தேன்
என் காதலியிடம் நான் மயங்கினேன்
அவள் அருகாமையில் என்னையே மறந்தேன்
இதுவே என் உலகம் என்று மருகினேன்.
நட்பு
தோழன் தோழியின் நட்பை பெற்றேன்
எங்களிடையே எந்த பேதமின்றி இருந்தேன்
இந்த புனிதத்தை ஆத்மார்த்தமாக அனுபவித்தேன்
இதுவே வாழ்வின் பொற்காலம் என்று அறிந்தேன்.
தாம்பத்யம்
தாம்பத்திய வாழ்க்கையில் நுழைந்தேன்
என்னவளின் பாசத்தில் உரைந்தேன்
எங்களின் புரிதலை மெச்சினேன்
வாழ்வின் உச்சத்தில் நின்றேன்.
முதுமை
முதுமையை நானும் பெற்றேன்
அதன் சுகத்தை முழுமையாய் ரசித்தேன்
வாழ்க்கையின் சாரத்தை புரிந்து கொண்டேன்
இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்தேன்.
முடிவு
"அவன்" வருகையை நானும் எதிர்பார்த்தேன்
புன்முறுவலோடு காத்திருந்தேன்
என்னை ஆரத்தழுவிக் கொண்டான்
தன்னோடு என்னையும் அழைத்துச் சென்றான்.