விந்தை உலகம்
பணத்திற்காக நிறம் மாறும்
பச்சோந்தி கூட்டத்திற்கு
பணிவிடை செய்யும் மனிதயினமே........!
வருமையில் பிறந்து
நிம்மதியிழந்து
வாழ்க்கையை தொலைத்துவிட்ட இவர்களை.....
உன் ஒரு கண்ணிலாவது சற்று
உற்றுநோக்கிப்பார்............
ஒருகோடி அம்புகள் இவர்கள்
உள்ளத்தை துளைத்திருக்கும்.....!
உயிரை இழந்துவிட்டு
வெறும் உடலைமட்டும்
மண்மீது சுமக்கும் இவர்களுக்கு
உயிர் கொடு.....!
உதவுகின்ற மனமிருந்தால்
உன் உதவிக் கரங்களை நீட்டி.....!!
-ஏழைகளின் தோழன்
-சதீஷ் ராம்கி.

