தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து22---ப்ரியா
தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்துக்கொண்டிருந்தான் வசந்த் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனின் நினைவைக்கலைத்தது ரியாவின் வருகை......
அறைக்கதவைத்தட்டும் சத்தம் கேட்டு வெளியில் வந்தான்..... வாசலில் ரியா எதுவும் பேசாமல் அவளையே நோக்கியவன் அவளை தீண்டத்தகாத ஒன்றைப்பார்ப்பதைப்போல் வெறித்துப்பார்த்தான்.....என் கண்முன் முழிக்காதே என்று தெறித்துவிட்டான்........
தாலிக்கட்டியது கள்வனாயினும் தன் புருஷன் நலமோடு இருக்கவேண்டும் இறுதி வரை சேர்ந்தே வாழவேண்டும் என்பதுதான் பெண்களின் ஆசை அதை மனதில் நினைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்....ஆனால் அவன் அவளை தீண்டக்கதகாதவர்களை பார்ப்பதைப்போல் பார்த்த....அவனது அந்த பார்வை அவளை இன்னும் வேதனைப்படுத்தியது, தன் சோகத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.புது இடம், அக்கம் பக்கம் யாருமில்லாத இடம், வீட்டிலும் வேலையாட்கள் இருப்பதாக தெரியவில்லை சமைக்கவா?வேண்டாமா?என்ற சிந்தனையில் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.....!
சிறிது நேரத்தில் வெளியில் வந்தவன் தனது வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டான் இவளிடம் எதுவும் சொல்லவில்லை.
மெல்ல எழும்பி வீட்டை சுற்றிப்பார்த்தாள்....அவனைப்போல் அவனது வடிவமைப்புகளும் வித்தியாசமான தோரணையில் அழகாகவே இருந்தன...எல்லாவற்றிலும் தான் பிறரிடமிருந்து தனித்து தெரிய வேண்டுமென நினைப்பவன் என்பது அவனது வீட்டின் வடிவமைப்பை பார்த்ததுமே புரிந்துகொண்டாள், வீட்டில் மட்டுமல்ல தனது நிறுவனத்திலும் இதையே செயல்படுத்தி நடத்தி வந்தான்..... நாம் தான் முட்டாள் தனமாக அவனது தொழில்வளர்ச்சியை நாசம் பண்ணிவிட்டோம் என்று கவலையுற்றாள்.
கிச்சனுக்கு போனாள் அதுவும் எதிர்பார்க்காத அழகிய வடிவமைப்பு..... சமைக்க பொருட்கள் எதுவுமே இல்லை, ஆனால் பாத்திரங்களும் ஒரு சமயலறைக்கு தேவையான மற்ற அனைத்துப்பொருட்களுமே இருந்தன,மேலே போய் பார்த்தாள் அங்குள்ள அறைகள் சுத்தம் செய்யாமல் இருந்தது கீழ்தளத்திலும் இதே நிலைதான் ஆனால் பார்க்க அழகாய் இருந்தது.....!
சரி! முதலில் இதை எல்லாம் சுத்தப்படுத்துவோம் என நினைத்தவள் 1.30மணி நேரத்தில் அனைத்தையும் சுத்தப்படுத்தி அழகாய் மாற்றிவிட்டாள்.சரியான பெண்களின் கையில் எது கிடைத்தாலும் அது அழகாகிவிடும் என்பது ரியாவின் கைவண்ணத்திலேயே தெரியும்.......அவளே மயங்கும் வண்ணம் அவனது அழகிய மாளிகை இன்னும் மிகவும் அழகாய் காட்சியளித்தது.
பசியின் கொடுமை என்னவென்பதை இப்பொழுதுதான் புரிந்துகொண்டாள் ரியா, பசியில் உயிர் போய்விடும்போல வாடினாள்..வெகுநேரமாகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை என்ன செய்வது பழிவாங்கவேண்டுமென்றே நம்மை தனியாக விட்டுவிட்டு போயிருப்பானோ?என்று நினைத்து கடிகாரத்தைப்பார்த்தாள் மணி இரவு 9ஐத்தாண்டியிருந்தது இன்னிக்கு வெறும் தண்ணீரைத்தவிர வேறு எதுவுமே அவள் சாப்பிடவில்லை......... ப்ரிட்ஜில் ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்போம் என்ற சிந்தனை வர உள்ளே சென்று பார்த்தாள்
அதில் எதுவுமே இல்லை தண்ணீரும் பழச்சாறும் மட்டும் தான் இருந்தது மறுபடியும் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு ஏமாற்றத்துடன் வந்து வெளியில் வாசலில் அமர்ந்துகொண்டாள்.......!
அவன் வருகையை நோக்கிக்கொண்டிருந்தவளின் கண்களும் சோர்ந்தன கால் பண்ணினாலும் அவன் பேசப்போவதில்லை அப்படியே பேசினாலும் தவறுதலாகத்தான் பேசுவான் தேவையே இல்லை என்று வீம்புடன் இருந்தாள் கூடவே பயமும் பசியும் இன்னும் ஆழமாய் தொற்றிக்கொண்டது........சிறிது நேரத்தில் கார் வரும் சத்தம் கேட்டது..... ஹார்ன் அடித்துக்கொண்டு உள்ளே வந்தவன் இவளை ஒரு இழிவான பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
சாப்டியா?இல்ல சாப்பாடு வேணுமா...ஒரு வார்த்தை கேட்கிறானா? இரக்கமற்றவன் என நினைத்துக்கொண்டு அவன் பின்னாலேயே உள்ளே சென்றாள்!
அவன் குடிபோதையில் தள்ளாட்டத்துடன் செல்வதை அப்போதுதான் கண்டுபிடித்தாள், அவனுக்குதான் குடிக்கிற பழக்கம் இல்லியே என்ன இது திடீர்னு எனக்காகவோ??என நினைத்தவள் அமைதியானாள்....
ஆனால் அவனே சொல்ல ஆரம்பித்தான் இதுவரைக்கும் குடிக்காத என்ன குடிக்கவைத்த பாவிதான்டி நீ....?
என்ன சீவி சிங்காரித்து பொண்டாட்டி மாதிரி எனக்கு காத்துக்கிட்டிருக்கியா? சீ வெக்கமா இல்ல....?நீ எனக்கு மனைவி இல்ல வேலைக்கார நாய்...என்று கண்டபடி அவளை திட்டினான்......
அவள் நாடியை உயர்த்தி இந்த அழகை வைத்து தானே என் மனதில் ஆசையை வரவழைத்து உன் பக்கம் என்னை திருப்பினாய் இதெல்லாம் வெறு வேஷம்தானடி? எந்த அழகை வைத்து என்னை கவர்ந்தியோ அதையே அணுவணுவாய் சிதைக்கப்போகிறேன் நடக்கப்போவதை பார் என்று அவளை அவன் அறைக்கு இழுத்துச்சென்றான்......!
அவளிடம் மிகவும் கேவலமாய் பேசி..... மூர்க்கத்தனமாய் நடந்துகொண்டான்.....அவள் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளயெல்லாம் பயன்படுத்தினான் அவனது போதை காற்று இவளுக்கு வாந்தி வரவழைக்க அவனது பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள் அவன் விடுவதாகஇல்லை இடையிடையே அவளுக்கு வெறுப்பேற்றும் படி "இந்த அழகு இந்த அழகு தானடி" என்று சொல்லி சொல்லி அவளை துன்புறுத்தினான் ஒரு மிருகத்தை போன்று நடந்து கொண்டான்........
அவளால் கண்ணைத்திறந்து அவனை பார்க்கமுடியவில்லை ஒரு மிருகத்தை போன்று நடந்துகொண்டான்.....அழகாய் இருக்கும் மிருதுவான பூவை பறித்து கசக்கி எறிவதை போல இவளையும் சிதைத்து விட்டான் அந்த காட்டுமிராண்டி மிருகம்........!
கீதுவின் ஊரில் அன்று இரவு திருவிழா கோலாகலாமாக நடக்க... கீது மட்டும் தனியாய் வந்து அழுது கொண்டிருந்தாள்.......அப்பொழுது அங்கு வந்த விஜயிடம் ரியாவை பற்றி சொல்லி கதறி அழுதாள்.......அவளை தேற்றிய விஜய்....எனக்கு ரியாவைப்பற்றி கவலை இல்லை கீது ஆனா......ல்.....வந்...தனா.... என்று சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் இழுத்தான் விஜய்.....???
தொடரும்......!!