நீ வரும் வரை-16

நீ வரும் வரை-16

தேடிக்கொண்டே தொலைந்து
கொண்டு இருக்கிறேன்...
உன்னை தேடி கொண்டே
என்னை தொலைத்து கொண்டு
இருக்கிறேன்...என்று நீ
எனக்கு கிடைப்பாய் என்ற ஏக்கத்தில்!!!...

(முன்கதை சுருக்கம்-பாலா பிரியாவை ஹோட்டல்க்கு அழைத்து வருகிறான், அங்கு அவனுக்கு ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் பிரியாவை ஹோட்டலிலேயே காத்திருக்க சொல்லி விட்டு பாலா கிளம்புகிறான்...பிரியாவோ வேறு வழியில்லாமல் அங்கு காத்திருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ரவியை சந்திக்கிறாள்)..

இருவரின் பார்வையும் ஒன்றாக கலந்து பார்வையாலே தங்களின் இத்தனை நாள் துக்கத்தையும் பகிர்ந்து கொண்டு பேசாமல் நிமிடங்களை தொலைத்து கொண்டிருக்க அந்த வேளையில் பிரியாவுக்கு கால் வருகிறது....

இருவரும் சுயநினைவுக்கு வருகிறார்கள்....

தனது போனை எடுத்து பிரியா ஹலோ சொல்ல, அந்த பக்கத்திலிருந்து பேசியது அவள் ஒட்டு மொத்த குடும்பமும் தான்...
பிரியா இங்க எல்லாமே அழகா இருக்கு, ஆனா எத எடுக்கறதுன்னு தான் தெரியல..உனக்கு எந்த கலர்ல எடுக்கறது? யாரு உனக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ண போறோம்னு எனக்கும் உன் அத்தைக்கும் நடுவுல ஒரு போட்டியே நடந்துட்டு இருக்கு...

இந்த விஷயத்துல நீ எனக்கு தாண்டி சப்போர்ட் பண்ணனும், பியுச்சர் மாமியார்னு அவங்களுக்கு சபோர்ட் பண்ணின அம்மா உன்கூட பேசவே மாட்டேன் என்று குழந்தையாக மாறி போன அம்மாவின் வார்த்தைகள் பிரியாவின் நெஞ்சத்தில் மிக பெரிய இடியாக இறங்கியது...

இத்தனை நாள் தான் தொலைத்து நின்ற சந்தோஷத்தை மீட்டு தருவதாய் தனக்கு முன்னாடி அமர்ந்து கொண்டு தன்னையே விழுங்கும்படி பார்த்துகொண்டிருக்கிறானே தன் கனவு காதலன், அவனிடம் இப்பொழுது என்ன சொல்வாள்...அவனை பார்த்த ஒரு நிமிடத்தில் தன் வாழ்கையில் தனக்காக தன் குடும்பத்தால் நியமிக்கப்பட்டு இன்று அத்தனை பேரும் மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் இருப்பதற்கு காரணமான தன் திருமணத்தை பற்றியே முழுதாய் மறந்து தான் போய்விட்டாள்..

கொஞ்ச நேரத்துல வந்துடுவேன், ஸ்வீட்டி, ப்யூட்டி என்று செல்லம் கொஞ்சி விட்டு திருமண கனவுகளை நெஞ்சில் சுமந்த படி சென்ற பாலாவையும் மறந்து போனாள் என்பதில் ஆச்சரியமில்லை...

ஆனால் இது என்ன நியாயம், தன்னிடம் எத்தனை முறை கேட்டிருப்பார்கள், ஏன் பாலா கூட பலமுறை தன்னிடம் மறைமுகமாகவும், நேராகவும் இதே விஷயத்தை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறானே...எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி "இந்த கல்யாணத்துல உனக்கு முழு விருப்பம் தானே, மனப்பூர்வமா சம்மதிக்கிறயா? என்று தான்...

அத்தனை பேரின் ஒட்டு மொத்த கேள்விக்கும் இவளது பதில் "ம்ம்" என்று தானே இருந்தது...இப்பொழுது போய் எல்லாம் உங்களால் தான் என்று யார் மேல் குறை கூற முடியும்..தெளிவாக கேட்டு தானே இந்த திருமணத்துக்கு இத்தனை ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள்...தான் மறுத்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காதே, ஆனால் பிரியாவால் மட்டும் என்ன செய்ய முடியும்....
அவளால் எத்தனை நாள் மறுக்க முடியும், அவளுக்கு மட்டும் தெரியுமா...இனி உன் வாழ்வில் நான் எப்பொழுதும் இடையூறாய் நுழைய மாட்டேன், ஏன் பார்க்க கூட மாட்டேன் என்று ஒரேயடியாய் சொல்லிவிட்டு சென்றவன் இன்று தன் எதிரில் அமர்ந்து கொண்டு தன் அத்தனை வேலைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நீ தான் என் வாழ்க்கை, நீ தான் என் எதிர்காலம்..உன்னை என்னால் மறக்க முடியவில்லை என்று காதல் வசனம் பேசிக்கொண்டு கைபிடிப்பான் என்று பிரியாவுக்கு எப்படி தெரியும்....

ஒரே நிமிடத்தில் அவனை பார்த்த ஒரே நிமிடத்தில் திசை மாறி, அவன் பின்னாலே போன அவளது உள்ளத்தை இழுத்து நிறுத்தினாள், ஆசை ஆசையாய் தனக்காக திருமண ஏற்பாடுகளை செய்யும் ஒட்டு மொத்த குடும்பத்தின் முகத்திலும் கரியை பூசிவிட்டு அப்படி என்னத்தை இவள் ஆண்டு அனுபவித்திட முடியும்...அத்தனை பேர் மனதையும் உடைத்துவிட்டு காதலில் ஜெயித்து இவள் சாதிக்க போவது என்ன..தன் உலகமாய் நினைத்து இத்தனை நாள் உறவாடி வளர்த்த குடும்பம் இவளை பார்க்க கூட பிடிக்காமல் விலகி போவதை பார்த்துவிட்டும் இவளால் உயிரோடு இருக்க தான் முடியுமா???

போனில் அவள் அம்மா, அத்தை என்று எல்லாரும் மாறி மாறி தங்கள் போட்டியில் ஜெயிக்க வேண்டுமென்று இவளோடு பேசி கொண்டிருக்க இவளுக்கோ தான் பாசத்தில் ஜெயிப்பதா? இல்லை காதலில் ஜெயிப்பதா? இதில் எது சரி? ஏதாவது ஒன்றில் மட்டுமே ஜெயிக்க முடியும், எதை தேர்ந்தெடுப்பது என்று உள்ளுக்குள் திணறி கொண்டு வலியில் துடித்து கொண்டிருந்தாள்...

இறுதியில் தீர்க்கமான முடிவை எடுத்தாள்...அம்மா நீங்க எத செலக்ட் பண்ணாலும் எனக்கு அது பிடிக்கும், எப்பவும் நீங்க தான்மா ஜெயிப்பிங்க ( நான் உங்களை தோக்க விட மாட்டேன் என்று மனதிற்குள் நினைத்து கொண்டு) போனை கட் செய்தாள்...

தெளிந்த மனதோடு ரவியை பார்த்தாள்...இதற்குமேல் அவனிடம் பேசபோவது உண்மையான பிரியா இல்லை, இத்தனை நாள் அவன் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு அவனுக்காக காத்து கொண்டிருந்த அவனுடைய பிரியா இல்லை...தன்னை ஆசையோடும் அன்போடும் பாசம் காட்டி இத்தனை வருடங்கள் வளர்த்து வந்த தன் அம்மாவின் மகளாய் தான் பேசபோகிறாள், தன் ஒட்டு மொத்த குடும்பத்தின் சந்தோஷத்திற்க்காக தான் பேச போகிறாள்...

சொல்லு ரவி எப்படி இருக்க? உன்ன பாப்பேன்னு நான் எதிர்பாக்கவே இல்லை...இருந்தாலும் உன்ன பாத்ததுல எனக்கு சந்தோசம்...ஆமா இவ்ளோ நேரமா நீ ஏதோ சொல்லிட்டு இருந்தயே, நான் கவனிக்கவே இல்ல...சரி இப்ப சொல்லு.. என்று அவனை பார்த்ததில் தனக்கு ஒன்றும் அவ்வளவு ஆர்வமில்லை என்பதை போலே முக பாவனையில் அவள் பேச, அவளை பார்த்த சந்தோசம் சிறிதும் குறையாத நிலையில் ரவி தன் காதலை பற்றி மீண்டும் கூற தொடங்கினான்..

பிரியா உன்ன என்னால மறக்க முடியல, அன்னைக்கு நீ என்கிட்டே உன் காதல சொன்னப்ப நான் விளையாட்ட எடுத்துகிட்டேன்..ஆனா இப்போ அதே காதல் தான் என் வாழ்க்கையோட விளையாடிகிட்டு இருக்கு...எந்த லட்சியத்துக்காக காதலே வேண்டாம்னு உறுதியா இருந்தேனோ அந்த லட்சியம் நிறைவேறி நான் நினைச்சபடி எல்லாம் நடந்தும் என் மனசு நிறையல, நீ இல்லாத என் வாழ்க்கை முழுமையடையாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்....
பிரியா ஐ லவ் யு....நான் உன்ன விரும்பறேன் என்று தன் காதலை உணர்வுபூர்வமாக ரவி சொல்ல பிரியாவோ இதை கேட்க தானே இத்தனை நாள் காத்திருந்தேன், ஆனால் இன்றோ இதை ஏன் கேட்டேன் என்று நினைக்கும்படி அல்லவா நான் சூழ்நிலைக்கு அடிமையாகி போனேன், (நான் உன்னை காயபடுத்த போகிறேன் என்று தெரியும் ரவி, ஆனா என்ன பண்றது இது நம்ப நல்லதுக்குனு நினைச்சிக்கோ, என்னை மனிச்சிடு ரவி என்று மனதில் நினைத்து கொண்டு)

என்ன சொல்ற ரவி, அன்னைக்கு நான் உன்கிட்ட விளையாண்டேனு இன்னைக்கு நீ என்கிட்டே விளையாடறயா?
அதான் அன்னைக்கு நீயே புரிஞ்சிக்கிட்டயே, நான் உன்கிட்ட விளையாடறேனு...அப்படி இருந்தும் இப்போ அத பெரிய விஷயமா பேசிட்டு இருக்க...நீ பேசறத யாரவது கேட்டா தப்பாயிடும்...

ரவி ஒரு சில மணி நேரம் ஒன்னா இருந்தோம், அப்போ நீ எனக்கு ஹெல்ப் பண்ண, நான் உனக்கு ஹெல்ப் பண்ணேன்...அது தான் நம்ப டீலிங்..அது அப்பவே முடிஞ்சி போச்சு...நானும் எல்லாத்தையும் மறந்துட்டேன்..இத்தனை நாள்ல உன்ன பத்தி நினச்சது கூட கிடையாது, என் லைப் ரொம்ப ஹப்பியா போய்கிட்டு இருக்கு...நீ வேற நடுவுல வந்து குழப்பம் பண்ணிடாத...
நீ ஒரு பிரெண்டா பேசிருந்தா உன்கிட்ட நிறைய பேசிருப்பேன், ஆனா நீ இப்படி ஒரு எண்ணத்துல திரும்ப வந்துருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் உங்கிட்ட பேச என்ன, உன்ன பாக்க கூட பிடிக்கல...
ப்ளீஸ் இங்க இருந்து போய்டு, அன்னைக்கு நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணியே, உன் வாழ்க்கைல எப்பவும் நான் குறுக்கிட மாட்டேன்னு அந்த வார்த்த உண்மைனா இங்க இருந்து போய்டு என்று பிரியா ஒரே அடியாக ரவியை வெறுக்கும் விதமாக பேச இந்த ஏமாற்றத்தை ரவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை...அது வரை அழுததில்லை, அழுததே இல்லை என்று கம்பீர தோரணையில் இருந்தவன் இன்று பிரியாவின் வார்த்தைகளை தாங்க முடியாமல் அழுதே விட்டான்...

அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை, கண்ணீர் வழிந்தோட மௌனமாக அங்கிருந்து அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்த பிரியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை..அழ முயன்றும் கூட அவளால் அழ முடியவில்லை...அழ கூட அவளுக்கு தெம்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்...அழுதிருந்தால் கூட கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கும்...ஆனால் அழ கூட முடியாமல் அவள் கண்களே அவளை ஏமாற்ற ஆரம்பித்து விட்டது..., வெறுப்பின் உச்சத்தில் நின்று கொண்டிருந்த அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் அப்படியே டேபிளின் மேல் கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்..

சிறிது நேரத்தில் அவள் தோளில் யாரோ கை வைத்து அவளை எழுப்புவது போல இருந்தது, அவள் ரவியை மட்டுமே நினைத்து கொண்டிருக்க ரவி தான் மீண்டும் வந்து விட்டானோ என்று மனம் தடுமாறி ரவி என்று உள்ளத்தின் அடிகுரலாய் அவள் அழைத்தபடி நிமிர்ந்து பார்க்க வந்ததோ பாலா....

என்ன ஆச்சி பிரியா, ஏன் இப்படி டேபிள் மேல தலை சாச்சுட்டு இருக்க? என்ன ப்ராப்லம் என்று அவன் பிரியாவின் பிரச்சனைகளை முழுதும் அறியாமல் இருந்தாலும், ஏதோ ஒரு பிரச்சனை மட்டும் இருக்கிறது என்று புரிந்துகொண்டவனாய் அவளை கேட்க...

அவளோ பதில் பேசமுடியாமல் தடுமாற, சரி பிரியா உனக்கு உடம்பு சரி இல்லன்னு நினைக்கிறேன்...சரி வா வீட்டுக்கு போகலாம் என்று வேறு எதுவும் பேசாமல் அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான்....

எழுதியவர் : இந்திராணி (22-Feb-16, 12:53 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 398

மேலே