தடைசெய்யப்பட்டவர்கள்

யாருமற்ற இரவில்
அமர்கிறேன்
தனிமையுடன்

இந்த உலகம் எங்களை
ஒதுக்கவில்லை
எங்கள் பிருமாண்டம் வேடிக்கையான போது
நாங்கள்தான் ஒதுக்கி விட்டோம்


விழிகளில் எந்த
ஒளியும் பார்வையும்
நுழைவதில்லை
இருளைத் தவிர

செவிகளிளோ
வார்த்தைகளையும்
இசையையும்
கேட்பதில்லை அமைதியைத்தவிர

இதழ்கள்
சொற்களையோ
பாடல்களையோ முனங்குவதில்லை
மௌனதைத்தவிர

பாதச்சுவடு எந்த பாதையிலும்
தெரிவதில்லை
பூமியை தவிர

ஏனெனில்
நானும் தனிமையும்
தடைசெய்யப்பட்ட
பகுதியில் வசிக்கின்றோம்

எழுதியவர் : வேடன் (23-Feb-16, 8:44 am)
சேர்த்தது : Karthikeyan
பார்வை : 272

மேலே