பரிசு
அறிவிப்பற்ற மழைத்துளியாய் வந்தாய்...
காரணமில்லாமல் கரைந்து சென்றாய் கானல் நீராய்...!
முகவரி இருந்தும் தொலைந்துபோனேன்
குவளை தேநீரில்..
குவியாடியின் பிம்பத்தில்....!
சத்தமில்லாத மெல்லிசையாய் இதயத்தில்
இசைதுவிட்டு.....
இதழ்களை மட்டும் மௌனச்சிரையில்
தள்ளிய உனக்கு ...
இமைகள் சுமக்கமுடியாத கண்ணீரும்.....
கண்ணீரில் வழியும் கவிதையும்......
காதலர்தின பரிசாக அமையட்டும்...!