போராட்டம்
வேளாண்மை செய்வோரை
மேலாண்மை செய்யும்
மேதாவிகளே!
அறைக்குள் உறங்கிக்கொண்டு
அரை லட்சம்
ஊதியம் பெரும்
அரசு ஊழியர்களே!
அரை நிர்வாணத்தில்
பட்டினியை போக்க
பசுமையோடு போராடும்
பாமரனை பாருங்கள்! - அவன்
சேற்றுக்குள் நின்றுகொண்டு
அழுக்கு துணிகளை அணிந்துகொண்டு
கோவணத்தை
ஆவணமாக்கினால்தான் - நீங்கள்
ஆணவத்தோடு
சோற்றுக்குள் கைவைத்து
சுத்தமான ஆடைகளை
சுருக்கமின்றி உடுத்துவீர்கள்!
போராட்டம் பொழுதுபோக்குக்காக அல்ல
பொழப்புக்காக என்பதை
புரிந்துகொள்ளுங்கள் புத்திசாலிகளே!