நாற்று வயல் காற்றெழுதும் கவிதை

ஆற்றினில் நீர்பெருகி ஓடிவரும் போதினிலே
நாற்றினை நல்லுழவர் நட்டிட -- ஆற்றலின்
பேற்றில் உயர்ந்திடும் நெற்பயிர் நல்வயலில்
காற்றெழுதும் நற்கவி தை

----கவின் சாரலன்
யாப்பு ஆர்வலர்கள் கவனிக்க :--
இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ற கர ஒற்று ற் அடிகளில் முதற்சீரில்
அமைந்து இருப்பதைக் கவனிக்கவும்
ஆற்றினில் நாற்றினை பேற்றில் காற்றெழுதும் ---
நேரிசை என்றால் இரண்டாவது அடியில் தனிச் சொல் பெற்று வரும்
இங்கே தனிச் சொல் ஆற்றலின் . இது முதற் சீர் ஆற்றினில் என்பதுடன்
எதுகையில் இயந்து ஒலிக்க வேண்டும் . ஒலிக்கிறது .

தனிச் சொல் பெறாது வருவது இன்னிசை வெண்பா .

இரண்டாவது அடியிலும் தனிச் சொல் வருபடியும் எழுதலாம்

ஆற்றினில் நீர்பெருகி ஓடிவரும் போதினிலே
நாற்றினை நல்லுழவர் நட்டிட -- ஆற்றலின்
பேற்றில் உயர்ந்திடும் நெற்பயிர் --சாற்றியே
காற்றெழுதும் நற்கவி தை

முக்கிய வேண்டுகோள் :
1.இளைய வயதினர் ஆர்வத்துடன் முயல வேண்டும் என்பதற்கே இப்பதிவுகள் .

2. இரசித்தால் கருத்து மட்டும் தெரிவிக்கவும் . நட்சத்திர சொடுக்கல்
தவிர்க்கவும் .
கவிதை எந்த வடிவமைப்பில் இருந்தாலும் நல்ல கவிதைகளை
இலக்கியப் பெரு நோக்குடன் இரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள் . எல்லோரும் இலக்கியத்தில் இன்புற்று வாழலாம்

3.கருத்து தெரிவிக்காமல் பகிர வேண்டாம் . அது பொருளற்றது

4.குழுச் சேர்ந்து கும்மாளம் அடிக்கதிதீர்கள் . குழுவுக்குள்ளே பூசல்
ஏற்பட்டு வருந்தி நிற்காதீர்கள்.

5. நற் கவிதையும் நல் உள்ளமும் நற் கருத்தும் என்றும் வாழும்.

6. உள்ளத்தனையது உயர்வு என்பது வள்ளுவர் கூற்று.

சிந்திக்க ...

எழுதியவர் : கவின் சாரலன் (24-Feb-16, 9:48 am)
பார்வை : 1015

மேலே