தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-16

உயிரே உயிரே நீயே எந்தன் உலகம்
உன்னால் நானடைந்தேன் வெற்றித் திலகம் !
காதல் என்பது ஆதாம் ஏவாள் காலத்து தொடக்கம்
அதன் பாடல் உலகில் எண்ணிலடங்கா இலக்கம் !


சாலைப் பூக்கள் தூசிப்பட்டும்
சாயம் போகத் துணிவதில்லை;
காதல் பூக்கள் காயப்பட்டும்
காமம் தன்னை வெறுப்பதில்லை;


மேக மகளின் இராட்ஜ்யத்தால்
வானகத்தில் கொண்டாட்டம் !
மோக மகளின் மாயவிரிப்பில்
மஞ்சத்திலே களியாட்டம் !


ஊதுவத்திப்போல் காமம் பத்திக் கொள்கின்றது
மாதம்பத்து ஆனவுடன் பன்னீர் குடம் உடைகின்றது
மரம்கொத்தி பறவைப்போல் மனசு ரெக்கை அடிக்கின்றது
இருதயத்தின் பால்குடுவை பிதுங்கி வழிகின்றது


சூரியனின் வெப்பம் பட்டு; மலரும் இளம் மொட்டு
மாறனின் மார்பினிலே மயிருலர்த்தும் சிட்டு
சந்திரனின் பிம்பம் பட்டு; சாளரம் சந்தோஷப்பட்டு
இந்திரனின் மன்மதத்தை மனசார ரசிக்கின்றது


தங்க சிலை உனக்கு சுங்க வரி இல்லையே
தங்க சாலை முழுக்க மங்கை உன்னை வரைந்தேனே
வங்க கடல் முத்தெடுத்து சங்கு கழுத்திலிட்டாயே
அங்கன்வாடி மழலைப்போல் உன்மடியில் தவழ்ந்தேனே.

எழுதியவர் : இரா.மணிமாறன் (26-Feb-16, 4:07 pm)
பார்வை : 66

மேலே