தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-17

மாப்புள ! மைனர் மாப்புள ! செல்வாக்கிருக்குற செருக்குல
மங்கை இவளை கெடுத்தியே மப்புல – மாந்தோப்புல !
மரியாதையா கட்டு இவ கழுத்துல – மஞ்ச தாலிய !
மறுத்தா மானம்போகும் உனக்கு ஊர் மத்தியில !

கண்ணகி வாழ்ந்த நாட்டுல – இவ
கற்பிழந்து நடப்பதா ரோட்டுல ?
புண்ணாகிப் போன கற்புல – இவ
புள்ளைக்கு நீதானே மாத்திரை !
ஏன் இவளை எமாத்துற... !

கொடுமை செய்த கோமாளியே
கோதை இவளோ ஏமாளியே !
எதையும் விழுங்கும் ராஜாளியே - இவள்
இதயம் அழுவுது உன்னாலயே !

மனுஷப் பிறப்பில் இவள் மோசமடா
வருஷக் கணக்கானாலும் தீராதடா
இவள தேடிவரும் எந்த மாப்பிளயும்
தேகம் கெட்டவன்னு திரும்பி போறானடா

உனக்கு சிறந்தவள் இவள் தானே
சிறப்பாய் வாழ வை எஜமானே !
கெட்டுப்போன தன் வாழ்வை
மீட்டெடுத்த உன்னை புகழ்வாளே !

கள்ளம் இல்லா இவள் உள்ளம்
உன்னை ஒருவனையே எண்ணும்
பள்ளம் தோண்டும் ஊர் உலகம்
உங்கள் உறவைக்கண்டு பயந்தோடும் !

இன்னைக்கே இவளை கல்யாணம்
பண்ணிக்க நீ முன்வர வேணும் ! - உன்
பண்ணைக்கு இவளை அழைத்துப்போய்
உண்மை பந்தத்தை உறுதி செய் !

உற்றார் உறவுகள் வெறுத்தாலும்
உன்னை நம்பி வந்தவளை வெறுக்காதே
கற்றோர் அவையில் உங்கள் காதல்
காலமெல்லாம் காவிய கானம் பாடும் !

எழுதியவர் : சாய்மாறன் (27-Feb-16, 4:33 pm)
பார்வை : 85

மேலே