காதல்


கண்களால் பேசும் மொழியை உருவாக்குவது காதல்,மனதினுள் உயிரை படைப்பது காதல், அர்த்தமில்லாத சிலிர்ப்பை அறிய வைப்பது காதல், ஆழமறியா மனதில் மூழ்கடிப்பது காதல், நேசத்தை நித்தமாய் நினைப்பது காதல், செல்ல சண்டைகளை கூட்டுவது காதல்,நாகரிகத்தை விளைத்தது காதல்,நித்திரையிலும் சுகம் தருவது காதல், நித்திரையின்மை தருவதும் காதல்,காத்திருத்தலையும் இன்பமாக்குவது காதல், காலத்தையும் சொர்க்கமாக்குவது காதல், கண்ட பின்னே ஆர்ப்பரிப்பது காதல்,காலம் கடந்த பின்னும் அனுபவிப்பது காதல்,காதலிக்கும் மனதை செல்லமாக கெஞ்ச வைப்பதில் சந்தோஷம் அடைவது காதல், நரை முடி உதிரும் வயதிலும் நகைச்சுவை ததும்ப கொஞ்சுவது காதல்,ஈரிடம் உடலானும் ஓரிடம் மனதாக வைப்பது காதல்,துடிக்கும் இதயத்தில் ஒவ்வொரு முறையும் காதலியின்(காதலன்) பெயர் சொல்வது காதல்,அன்பை சேமிக்க முடியாமல் திணறுவது காதல், புனிதத்தின் அடையாளம்,உயிர்களின் உன்னதமான காதலை கொச்சை பட விடாதிர்கள்,படுத்தாதீர்கள்,அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்,காதலிக்காதவர்கள் என்னை போன்று பெற்றோரை,நண்பர்களை காதலித்து வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

எழுதியவர் : ஶ்ரீதரா மணிகண்டன் (27-Feb-16, 6:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே