விழுதுகள்

1) ஹைக்கூ

நீரமர வேர்கள்.
நிலையாய்த் தாங்குகின்றன
முகில் விழுதுகள்!

ஆலமரமில்லை .
ஆனாலும் நிறைய விழுதுகள்
பள்ளிக்கூடத்தில்.

2) லிமரைக்கூ

நம்பிக்கை விழுதுவைத்த ஆலமரம்
நயவஞ்சகக் கறையான் அரிக்க
தெம்பின்றிச் சாயுமிடம் முதியோர் மடம்

பின்னாளில் தாங்குமென வளர்த்த விழுதுகள்
பெண்டாட்டி மந்திரத்தில் பெற்றோரை
இந்நாளில் தள்ளிவிடும் சமூகப் பழுதுகள்

3) சென்ரியு

விழுந்து விடக்கூடாதென்று
வளர்த்ததுகள்., விழுதுகள்
விழக்கூடாத மதுவில்.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Mar-16, 2:21 am)
Tanglish : vizhuthukal
பார்வை : 730

மேலே