கவிதை நான் எழுதுவேன் உன் நெஞ்சில்

தேன்மலரில் தென்றல் எழுதும் மலர்க்கவிதை
வான்நிலவு நீலத்தின் மீதெழுதும் வெண்கவிதை
தேன்இதழில் நீயெழுதும் புன்னகைப் பூங்கவிதை
நான்எழுது வேன்உன்நெஞ் சில்

---கவின் சாரலன்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

ஆர்வலர்கள் முயலுங்கள் .

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-16, 10:59 am)
பார்வை : 201

மேலே