தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து24---ப்ரியா

வசந்த் இன்று எப்படி வரப்போகிறானோ?என்று அவன் வரவை எதிர்பார்த்து கழுகிடம் மாட்டிய கோழிக்குஞ்சு நடுங்குவதைப்போல் நடுங்கிக்கொண்டிருந்தாள் ரியா...

ரியாவின் எண்ணப்படியே அவன் அன்னிக்கும் அவளை அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை வேட்டையாடினான்......இப்படி தினம்தினம் ஒவ்வொரு வேளையும் நரக வேதனை அனுபவித்துக்கொண்டிருந்தாள் ரியா நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன 2மாதங்கள் ஓடிவிட்டன.... அன்றும் போதையில் வீட்டுக்கு வந்தான் ஆனால் வழக்கத்திற்கு மாறாய் அமைதியாய் போய் படுத்துக்கொண்டான் அவனது அந்த அமைதி இவளை இன்னும் வாட்டியது என்ன ஆயிற்று எனபக்கத்தில் போய் பார்த்தாள் அவன் பாட்டுக்கு என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தான்.......

மார்க்கெட்ல என்னோட பொருளுக்கு மதிப்பே இல்ல என்ன மாதிரியே அவனும் அனைத்தும் பண்றான் எல்லாத்துலயும் தனித்து வித்யாசமா இருக்கணும்னு ஆசைபடுவேன் ஆனா இன்னிக்கு எந்த இடத்துலயும் என் முயற்சி செல்லுபடி ஆகவில்லை அவனே என் முயற்சியால் ஆன வடிவமைப்பை செய்துகொண்டிருக்கிறான் இதுவரைக்கும் தோல்வி அடையாத நான் இப்பொழுது ஒரு பொண்ணால் அவனிடம்?? என் எதிரியிடம் தோற்று நிற்கிறேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை கடவுளே என்று தனியாக போதையில் பேசிக்கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிவிட்டான்...!

ஆனால் ரியாவால் தூங்கமுடியவில்லை மனது முழுவதும் அவனது தொழிலைப்பற்றியே சிந்தனை ஓடிகொண்டிருந்தது எப்படி முயற்சி எடுத்து பல அரிய படைப்புகளை வடிவமைத்துள்ளான்.....ஆனால் அந்த பிரதீக் எந்த கஷ்டமும் இல்லாமல் அடுத்தவன் உழைப்பைத்திருடி வாழ்ந்து கொண்டிருக்கிறான் இனி தலைகீழ் நின்றாலும் இழந்த அந்த வெளிநாட்டு நிறுவனத்துடனான கூட்டுறவு வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாது என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு ஐடியா தோன்ற அதை செயல்படுத்த திட்டமிட்டாள்........!

அவனது செல்போனை எடுத்து அவனுக்கு தெரியாமல் கீது மற்றும் விஜயிடமும் பேசி விட்டாள்.....அவர்களது ஊக்கமான பேச்சுக்கள் இவளை மேலும் உற்சாகமூட்டின....ஆனால் வந்தனாவைப்பற்றி எந்த தகவலும் இரண்டுபேருக்கும் தெரியவில்லை??

அடுத்த நாள் காலையில் மிகவும் சீக்கிரமாக அவளது வேலைகளை முடித்துக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த நினைத்தாள் அதற்கு முன் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டு என்றவள்.........அவனுக்கு காபி போட்டு கொடுத்தாள் மதிய சாப்பாடும் அவன் விருப்பமின்றி அவனுக்கே தெரியாமல் அவனுடைய பேக்கில் எடுத்து வைத்தாள் இவளது இந்த செயல் அவனை வெறுப்பேற்றியது....... அழுமூஞ்சியாக இருந்தவள் புன்னகைத்துக்கொண்டே அவன்முன் நடமாடிக்கொண்டிருந்தாள் வசந்த்க்கு இவள் நடத்தையின் நோக்கம் புரியாமல் குழப்பத்துடன் கம்பெனிக்கு சென்றான்.

அவன் சென்றதும் முதல் வேலையாக பக்கத்து வீட்டிலிருக்கும் அந்த வயதான அம்மாவிடம் போய் பேச ஆரம்பித்தாள்....அம்மா நான் பக்கத்து வீட்டு வசந்தோட..............என்று ரியா சொல்ல ஆரம்பித்ததும்......இவள் கழுத்தில் தொங்கிய தாலிக்கயிறை பார்த்ததுமே அந்த அம்மா புரிந்ததுமா வசந்த் ஒன்னு செய்தா அதுல ஏதாவது ஒருகாரணம் இருக்கும் ரொம்ப நல்ல பையன் ஏன்மா உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிக்கலியா?அவனோட செலெக்ஷன் எப்போதுமே தவறாக இருக்காது வாழ்க்கையிலும் சரி தொழிலிலும் சரி.....தேவதை மாதிரி இருக்காமா சரியா தேர்ந்தெடுத்திருக்கான்............ அவன் என்னோட சொந்த அக்கா பையன்தான் குடும்பத்தில் நடந்த பழைய பகையின் காரணமாக பேசாமல் இருக்கிறோம் அதற்காக திருமணம் செய்துகொள்ளும் போது கூட அழைக்காமல் இருப்பான் என்று நினைத்தும் பார்க்கவில்லை என்று கண்ணீர் மல்கக்கூறினார் அந்த அம்மா..........!

"என் திருமண நிகழ்வு எனக்கே தெரியாமல் கனவில் நடந்த மாதிரி இருக்குது இதுல எங்க வெளி உலகத்து மனிதர்களுக்கு உணர்த்துவது" என்று மனதில் நினைத்து வருந்தினாள் ரியா...?

வசந்தின் சிறு வயது முதல் இப்போது வரை குடும்பம் மற்றும் தொழிலில் நடந்த அனைத்து விஷயங்களையும் அந்த அம்மா சொல்ல சொல்ல அதிர்ச்சியும் வருத்தமும் ரியாவைத்தொற்றிக்கொண்டது......

அப்போ நான் கிளம்புறேன் அம்மா என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தாள் ரியா....அப்போது அந்த அம்மா கொஞ்சம் நில்லும்மா வசந்த் தான் என்னிடம் பேசவில்லை நீயாவது அடிக்கடி வந்து போ எங்களுக்கும் நிம்மதியாக இருக்கும் உன் பெயர் என்ன என்று கேட்டு விட்டு உனக்கு என்ன தேவை என்றாலும் தயங்காமல் கேளு என்று இன்முகத்தோடு அனுப்பி வைத்தாள் அந்த அம்மா.....!

இந்த அம்மாவின் பேச்சால் மிகவும் ஆறுதல் அடைந்தாள் ரியா, அவள் மாடியில் துணி காயவைக்கும் சமயம் அவள் வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது யாரென்று எட்டி பார்த்தவளுக்கும் அதிர்ச்சி??????



தொடரும்....!!

எழுதியவர் : ப்ரியா (1-Mar-16, 12:33 pm)
பார்வை : 436

மேலே