ஊர்மிளா அனாதை இல்லை

ஊர்மிளா.... அனாதை இல்லை...!!
--------------------------------------------------

ஊர்மிளா.. ! கடமைக்காக எதையோ சாப்பிட்டு விட்டு அலுவலுக்கு கிளம்பினாள்...வெளியில் செல்லவே பிடிக்கவில்லை அவளுக்கு... " என்ன சமுதாயம் இது? எனக்கென்று ஒரு தனிப்பட்ட ஆசை, எண்ணம் எதுவும் இருக்கக்கூடாதா என்ன? " மனதிற்குள் நொந்தாள்...

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள்.... வாழ்வில் எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கிற வெறி அவளிடம் அப்பொழுதே இருந்தது... நாட்கள் செல்ல , செல்ல அதன் உத்வேகம் அதிகரித்தது.... நன்றாய படித்தாள்.... சலுகைகள் கிடைத்தன....
எம். ஏ. எம். எட் முடித்தாள் .... அரசு பள்ளியில் பள்ளி நிர்வாக பொறுப்பில் சேர்ந்தாள் .... தன வேலையை நன்கு திறம்பட செய்து வந்தாள்...

சிறு வயதில் அனாதையாக இருந்தபோது தன்னை பற்றி கவலைப் படாத மாமா , இன்று இவள் நல்ல நிலையில் இருப்பதை பார்த்துவிட்டு தன மகனை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்....

ஊர்மிளாவிற்கு கொஞ்சம் கூட இதில் இஷ்டம் இல்லை.... அவன் ஒரு முரடன்.... ஊர் வம்பை விலைக்கு வங்கி வருபவன்... வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊரை சுற்றுபவன்... பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொன்பவன் ..... அவனைக் கண்டாலே இவளுக்கு வெறுப்பு....

ஊர்மிளா ஒரு தனி வீடு பார்த்து தன தோழியோடு குடி இருந்தாள்... அடிக்கடி அங்கு வந்து கட்டாயப் படுத்த ஆரம்பித்தார் மாமா...

வீட்டு சொந்தக்காரர் எவ்வளவோ சொல்லியும் இவள் மாமா " நீங்க யாரு? இது என் தங்கை பொண்ணு... உங்க வேலையை பாருங்க..." என்று மரியாதை இன்றி ஓரிரு முறை பேசிவிட்டார்....

" இதற்கு என்ன முடிவு? என்ன செய்யலாம்? " யோசித்தாள்....

ஒரு முடிவிற்கு வந்தவள் போல் கொஞ்சம் முகத்தேளிவோடு கிளம்பினாள்..

இவள் வளர்ந்த அன்னதை இல்லம் .... வாசலில் இவளைப் பார்த்ததும் அங்கு இருந்த குழந்தைகள் ஓடி வந்து இவளை கட்டிக்கொண்டன.... தான் வாங்கி வந்திருந்த இனிப்புகளை அவர்களுக்கு கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்..

வேதநாயகி..... இவர்தான் அந்த இல்லத்தை துவக்கி நடத்தி வருபவர்.... இவருக்கு ஊர்மிளா மீதி தனி பாசம்... இவளின் இளகிய குணம், எதையும் யோசித்து முடிவெடுக்கும் திறமை எல்லாமே அவரை கவர்ந்ததுண்டு..... இரண்டு வருஷங்கள் முன்பே ஊர்மிளாவிடம்....

" ஊர்மிளா.... எனக்கு வயசாகி விட்டது... உடம்பு முன்போல் இல்லை.... நான் உயிரோடு இருக்கும் பொழுதே இந்த இல்லத்தை உன்பெயருக்கு மாற்றி விடுகிறேன்.... நீ இதை திறம்பட நடத்து.. இதுதான் என் ஆசை, விருப்பம் எல்லாமே..." திட்ட வட்டமாய் வேதநாயகி கூறியதும் சிலை போல் நின்று விட்டாள் ஊர்மிளா.. எதுவும் எதிர்த்து பேச முடியவில்லை...

அன்று இரவு முழுதும் யோசித்தாள்...

மறுநாள் காலை ... " அம்மா... நீங்க என்ன சொன்னாலும் நான் செய்ய கடமைப் பட்டிருக்கேன்.. ஆனால், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்... நான் தனித்து , என் விருப்பம் போல் கொஞ்ச காலம் வாழ விரும்புகிறேன்... தனித்து... இந்த இல்லத்து தொடர்பிலிருந்து கொஞ்சம் விலகி.... தயவு செய்து என்னை கட்டாயப் படுத்தாதீர்கள்... ஓரிரு ஆண்டுகள் போகட்டும் நல்ல முடிவுடன் வருகிறேன்... " மிகத் தெளிவாய் கூறினாள் ஊர்மிளா..

இதோ வந்திருக்கிறாள் வேதநாயகியைப் பார்க்க...

இவளைப் பார்த்தும் மிகவும் சந்தோஷம் வேதநாயகிக்கு...

" வா...! ஊர்மிளா.... ஒவ்வொரு நாளும் வருவேன்னு காத்திருக்கேன்.... " மெல்லிய குரலில் வேதநாயகி...

" எப்படிமா இருக்கீங்க? இதோ வந்துவிட்டேன்... முழுமையாக... உங்கள் விருப்பத்தை நிறைவேத்த..." ஊர்மிளா.

இதைக் கேட்டதும் அவளை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டாள்....

கண்ணில் ஆனந்தக் கண்ணீர்...

ஊர்மிளா.. முடிவெடுத்து விட்டாள்... தனக்கு நிறைவைக்கொடுக்கும் இடம் இது என்று....

நன்றியுடன்
மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (1-Mar-16, 11:51 am)
பார்வை : 353

மேலே