சுசுமிதா அசுமிதா

=======
அடியே சுசுமிதா, அசுமிதா! எங்கடி போயிட்டீங்க?
===============
இதோ பாட்டி வந்துட்டோம். ஏம்பாட்டி எங்க பேரத் தப்புத் தப்பா சொல்லறீங்க? எம் பேரு சுஷ்மிதா, எந் தங்கை பேரு அஸ்மிதா. இதக் கூட உங்களால சரியாச் சொல்லமுடியாதுங்களா பாட்டி!
========================
ஏண்டி பேத்திங்களா, உங்க அப்பனும் அம்மாளும் உங்களுக்கு நம்ம தாய் மொழிலயா பேருங்கள வச்சிருக்கறாங்க? என்ன்மோ தமிழ்ல அழகான பெருங்க எல்லாம் இல்லாத மாதிரி இந்திப் பேருங்கள வச்சிருக்காங்க. ஒலகத்திலெயே மொதல்ல தோன்றின மொழி நம்ம தமிழ் மொழின்னு சொல்லறாங்க. நானும் உங்க தாத்தாவும் எழுதப் படிக்கத்தெரிஞ்வங்களா இருந்தாலும் தாய் மொழிப் பற்றினால உங்கப்பனுக்கு அழகப்பன் –ன்னு பேரு வச்சோம். ஏ அவனுக்கு சுந்தர் –ன்னு இந்திப் பேர எங்களுக்கு வைக்கத் தெரியாதா?
==========================
பாட்டி உங்க காலம் வேற, எங்க காலம் வேற.
=======================
அடி போங்கடி. எந்தக் காலமா இருந்தாலும் தாய் மேல பிள்ளைங்களுக்குப் பாசம் இருக்குமா, இருக்காதா?
============================
நிச்சயமா பெத்த தாய் தந்தை மேலே பிள்ளைகங்களுக்கு அன்பு இருக்கும்னு பாட்டி. பெத்தவங்க மேலே அன்பு இல்லாதவங்க நல்ல மனிதர்களா இருக்க முடியாது பாட்டி.
==================================
அதே மாதிரி தாண்டி நம்ம தாய் மொழியும். பெத்த பிள்ளைகளுங்களுக்கு வேற மொழிப் பேருங்கள வச்சு நம்ம தாய் மொழியையும் பிள்ளங்களையும் கேவலப்படுத்தக் கூடாதடி.
===============================
நீங்க சொல்லறது சரி தான், பாட்டி. நாங்க அப்பாகிட்டச் சொல்லி எங்க பேருங்கள சட்டப்படி நல்ல தமிழ்ப் பேருங்களா வச்சுக்கப்போறோம் பாட்டி,
==============================================================


=========================================================
நன்றி: விக்கிப் பீடீயா & இண்டியா சைல்ட்நேம்ஸ்காம்
Sushma/ Susma (பன்மை) = வனப்புள்ள, மகிழ்ச்சியாக இருக்கிற பெண்கள் Sparkling or beautiful women. ਸੁਸ੍ਮਿਤਾ; സുസ്മിതാ; સુસ્મિતા; ஸுஸ்மிதா; সুস্মিতা; ಸುಸ್ಮಿತಾ; సుస్మితా "women having lovely smile". "women having lovely smile". மகிழ்ச்சியான, வனப்பான புன்னகையுள்ள பெண்கள்.
ASMITA अस्मिता = Pride தற்பெருமை, செருக்கு

=======
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய.

எழுதியவர் : மலர் (1-Mar-16, 6:46 pm)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே