பிரிவின் ரணம்........

பிரிவின் ரணம்........
விடுப்பின் நாழிகையின் ஆயுள்
மரணிக்க சில வினாடிகள்
பிரிவின் ரணம் அறிந்து
இரு உறவுகளின்
உள்மனதின் ஓசையற்ற அழுகை
பெருக்கெடுத்த ஊற்று நீரைப்போல்
விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள்
மௌனம் வார்த்தைகளை சிறையிட
இதழில் ஈரப்பதம் உலர்ந்து
சிவந்து வாடிய முகத்தில்
இரவல் புன்னகை
இறுகி பற்றிப்பிடித்திருந்த
என்னவளின் கரங்களுக்கு
இடைவெளியிட்டது
விடுப்பின் இறுதி விடாடி
இரத்த உறவுகளின் புன்னகை
வழியனுப்பில் மீண்டும் ஒரு
திரவியம் தேடிய பயணம்
SHEENU

எழுதியவர் : (16-Jun-11, 9:20 am)
சேர்த்தது : Sheenu
Tanglish : pirivin ranam
பார்வை : 496

மேலே