என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம்
......................................................................முகவரி
......................................................................இதய ராஜ மன்மதன்
......................................................................இதய இடதுபுற ஒழுங்கை
......................................................................காதல் குறுக்கு தெரு
......................................................................காதல் நகர்
இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில்
காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே தவிர .உணர்வை மீட்கும் சாதனமாக காணப்படுவதில்லை . படித்தவுடன் டிலீற் பண்ணுவதுடன் அதன் உணர்வும் இறந்து விடுகிறது
ஆனால் காதல் கடிதம் அப்படியல்ல ........!!!
........................................கடித்தத்தில் ஆயிரம் வர்ணனைகள் பிடிக்குமோ பிடிக்காதோ எழுதியே ஆவோம்
அந்த கடிதத்தை பாதுகாக்க படும் போராட்டம் வாழ்கையின் பெரும் இன்பம் . யாருக்கும் தெரியவும்
கூடாது . அடிகடி எழுத்து வாசிக்கவும் வேண்டும் . யாரும் பார்த்திடவும் கூடாது . யாருக்கும் கேட்கவும்
கூடாது . ஆனால் வாய் விட்டு வாசிக்கவும் வேண்டும் . இத்தனை இன்பத்தை தரும் காதல் கடிதம்
இன்று இறந்துகொண்டு வருகிறது . இல்லையென்றே சொல்லலாம் . இந்த காதல் கடிதத்தின் சுவாரிசத்தை எழுதுவோம் என்ற எண்ணத்துடன் அழுத்த ஆரம்பிக்கிறேன் உறவுகளே வாருங்கள்
என்னோடு நீங்கள் காதல் கடித்தத்தின் இன்பத்தை அனுபவிப்போம் .........!!!
இவன்
இதய ராஜ மன்மதன்
காதல் நகர்