நாணம்

கண்கள் கவிழ்ந்துயர
கால்விரல்கள் தரைமீது கோலமிட
கண்ணக் குழியருகே
மாலைசூரியன் குடியேற
உன் வெட்கப் புன்னகைக்கு
விலைகூற முடியாமல்
கண்ணாடியில் விழும் பிம்பத்தை போல்
நானும் தலை குனிந்தேன்
நாணத்தின் கரம் பிடித்து...

எழுதியவர் : மிதிலை ச.ராமஜெயம் (3-Mar-16, 9:31 pm)
Tanglish : naanam
பார்வை : 143

மேலே