உண்மையாக என்னை வெறுத்துவிடு 555

அடியே...

நான் உன்னோடு கைகோர்த்து
நடந்ததில்லை...

இனி உன்னோடு கைகோர்த்து
நடக்க ஆசை எனக்கு...

நான் உன்னை
காதலிக்கிறேன் என்றேன்...

ஏளன ஒராபார்வையில்
என்னை பார்த்து புன்னகைத்தாய்...

நான் இதுவரை வாழ்ந்தது
வாழ்க்கை இல்லை...

உன்னோடு வாழ ஆசை என்றேன்
நீ புருவம் உயர்த்தினாய்...

நான் மணந்தால் உன்னை
இல்லையேல்_______என்றேன்...

நீ என்ன பைத்தியமா என்றாய்...

நீ செல்லும் இடமெங்கும்
உன்னை தொடர்ந்தேன்...

நீ என்ன என் நிழலா
என்றாய்...

உன் நிழலைக்கூட உன்னால்
இருளில் காணமுடியாது...

என்னை உணர்வால்
உணர்வாய் என்றேன்...

கேலியான புன்னகையுடன் என்னை
நீ காதலிக்கிறேன் என்றாய்...

நீ என்னை வெறுக்க நினைத்தால்
உண்மையாக வெறுத்துவிடு...

அந்த வலியை நான்
தாங்கிகொள்வேன்...

பொய்யாக மட்டும் என்னை
நேசித்துவிடாதே...

அந்த வலியை என்னால்
தாங்கிக்கொள்ள முடியாது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Mar-16, 9:24 pm)
பார்வை : 719

மேலே