ஓர் எளிய மனிதர்

மோகன் தாஸ் காந்தி எல்லோரையும்போல் தானும் படித்து பட்டம் பெற்று குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கிலாந்தில் படித்து, தென் ஆப்பிரிக்காவில் வேலைக்கு சென்றார். ஆனால் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை அவரை புரட்டிப்போட்டது! அவர் மீண்டும் இந்தியா திரும்புகையில்… ஒரு புதிய மனிதராய், மஹாத்மாவாக வந்திறங்கினார்!
ஆயுதமோ, வன்முறையோ, பலமோ, செல்வமோ, அரசியல் செல்வாக்கோ, ஏன்... மார்பில் ஆடைகூட எதுவும் இன்றி, ஒரு மெலிந்த கிழவர்... ஒரு தேசத்திர்க்கு சுதந்திரம் பெற காரணமாய் இருந்தார் என்பது உலக சரித்திரத்திலேயே காணமுடியாத அதிசயம்! France, Russia, America, China போன்ற நாடுகளெல்லாம் போர்களில்தான் சுதந்திரம் பெற்றது! ஆனால் இந்தியாவோ… ஆகிம்ஸையில் சுதந்திரம் பெற்றது!
காந்தி, Bible, Bhagavad Gita, Kuran போன்ற... புத்தகத்திலேயே இருந்த அற நூல்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்! தான் சுடப்பட்டு சாகும் வேளையில் கூட எந்த பதற்றமும் இன்றி, சுட்டவனைக்கூட கடிந்துகொள்ளாமல், அந்த வேளையிலும்... ஹே ராம்! ஹே ராம்! ஹே ராம்! என்று சொல்லிதான் தன் உயிரை விட்டார்!
வாழும் போதும் சுயக்கட்டுப் பாட்டுடனும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு எளிமாய் வாழ்ந்தார் அந்த மகான்! காந்தியால் வாகனத்தில் செல்ல முயுமென்றாலும்… அதை தவிர்த்து, எங்கு சென்றாலும் பல கிலோ மீட்டர்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார்! தன் துணிகளை தானே நெய்தும் - துவைத்தும் கொண்டார், தன் உணவினை தானே சமைத்துக்கொண்டார், தன் கழிப்பறையை தானே கழுவிக்கொண்டார், தன் தலைமுடிகளைக்கூட தானே வெட்டிக்கொண்டார், பணத்தையும், பொருளையும் சிக்கனமாய் கையாண்டார், மிகச்சிறிய அளவே உணவு உண்டார், அவ்வப்பொழுது விரதமும், மௌன விரதமும் இருந்து வந்தார், தானே ஆடு, மாடுகளுக்கு உணவிட்டார், எப்பொழுதும் இறைவனின் பெயரையே ஜபித்துக்கொண்டும், தியானித்துக்கொண்டும் இருந்தார்; எந்த வகையிலும், எந்த ஒரு மனிதனையும் அவர் துன்புறுத்தக்கூடாதென சாகும் வரை உறுதியாய் இருந்தார்!
இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் நலிவுற்றிருந்தது. அப்போது நேரு உட்பட பலர், ‘இதுதான் சரியான நேரம், இப்போது நாம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தால் எளிதில் சுதந்திரம் அடைந்து விடுவோம்!’ என்று காந்தியை வர்ப்புரித்தினார்கள். ஆனால் காந்தி இதை பிடிவாதமாய் மறுத்துவிட்டார், இதர்க்காக பலர் காந்தியை கோபித்துக் கொண்டார்கள். ஒருவர் பலகீனமாய் இருக்கும் போது அவர்களை தாக்குவது தர்மம் இல்லை என்பதனால்தான் காந்தி இதனை தவிர்த்தார். பிரிட்டிஷ் அரசை காந்தி எப்போதுமே எதிரியாய் பார்க்கவே இல்லை! மேலும் பல பிரிட்டிஷ்காரர்களுக்கு நெருங்கிய நண்பராவும் அவர் இருந்தார்! பிரிட்டிஷ் அரசின் கொள்கையைத்தான் காந்தி தவிர்த்துவந்தாறே ஒழிய, பிரிட்டிஷ் மனிதர்களை அவர் ஒருபோதும் வெறுக்கவில்லை!
‘என் வாழ்க்கையே எனது செய்து’ என்று தான் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய சுயசரிதைக்கு பெயரிட்டார் காந்தி. தனது சுயசரிதையில், அவர் பீடி திருடியதையும், புகை பழக்கத்தை கைவிட முடியாமல் தன் தந்தையின் பாக்கெட்டில் இருந்து காசு திருடி புகைத்ததையும், அவர் தந்தை இறந்த அன்றே தன் மனைவியுடன் தான் உடலுறவில் இருந்ததையும், வெளிப்படையாய் எழுதினார். மேலும் தான் சிறு வயதில் செய்த தவறுகளை நினைத்து குற்றவுணர்வில் வருந்தி, இப்படியெல்லாம் யாரும் இருக்கக்கூடாது என்று மனம் நொந்து வாசகர்களை வேண்டிக் கொண்டார்! காந்தி தனக்கு இட்ட ‘மஹாத்மா’ என்ற பெயரை கடைசி வரை அவர் ஏர்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது! காந்தி எப்போதும் ஒரு எளிய மனிதராகவே இருக்க விரும்பினார்! காந்தியின் சுயசரிதை எல்லா இந்தியரும், எல்லா மனிதரும் வாசிக்க வேண்டிய, ஒரு மகத்தான மனிதனை பற்றிய புத்தகம்!
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு உலகமே இந்த மெலிந்த கிழவரை பிரம்மிப்பாய் பார்த்தது! Albert Einstein னிலிந்து Charlie Chaplin வரை பலர் இந்த மனிதரை பார்க்க இந்தியாவிற்கு வந்தனர்! உலகம் காந்தியைப் பற்றி ஏராளமான புத்தகங்களையும், செய்திகளையும் எழுதி குவித்தது! கோடிக்கணக்கான மக்கள் காந்தியின் பின் சென்றனர்! பிரிட்டிஷ் ராஜ்ஜியமே இந்த கிழவரை பார்த்து பயந்தது!
காந்தியை Inspiration னாக வைத்துக் கொண்டவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள் அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் Nelson Mandela, Martin Luther King, Albert Einstein, Leo Tolstoy(as a friend), Barack Obama, Steve Jobs… போன்றவர்கள்.
காந்தி தென் ஆப்ரிக்காவில், ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்ட அதே ரயிளுக்கும், அதே Station னுக்கும் இன்று என்ன பெயர் தெரியுமா? ‘Mahatma Gandhi Station’, ‘Mahatma Gandhi Train’!!
காந்தியின் வாழ்க்கை என்னை அதிகம் பாதித்தது. அவரின் எளிமை, பக்தி, தியாகம், சுயக்கட்டுப்பாடு, நேர்மை, மனித நேயம் எல்லாம்... எல்லாம்... என்னை அந்த மஹாத்மாவின் பக்கம் இழுத்தது. எப்போதெல்லாம் காந்தியின் நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் அவர் விரும்பிக்கேட்ட இரண்டு பாடலான ‘வைஷ்ணவ ஜெனதோ’, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ என்ற பாடல்களை காந்தியின் நினையில் விரும்பி கேட்பேன்!
____________________________________________________________________________________________
ManivannanGallery.BlogSpot.Com