மகளிர் தின நல் வாழ்த்துக்கள் --முஹம்மத் ஸர்பான்

கண்களால் கடிதம் எழுதினால்
கனவில் நலம் கேட்பாள்
கனவில் காதல் சொன்னால்
நினைவில் மெளனம் காப்பாள்..
பத்து திங்கள் தன்னை வருந்தி
மரண வாசலில் ஆயுள் கிடத்தி
புதிதாய் உயிர்கள் படைக்கும் பெண்மை
அவள் உலகம் காக்கும் தொன்மை

நிலவு இல்லையென்றால்
வானுக்கு பெறுமதியில்லை
மலர்கள் இல்லையென்றால்
மரத்திற்கு பெறுமதியில்லை
அம்மா இல்லையென்றால்
பாசத்திற்கு பெறுமதியில்லை
பெண்மை இனம் இல்லாவிட்டால்
உலகிலும் உயிர்கள் இல்லை.

அல்லும் பகலும் உறங்கா விழிகள்
இன்பம் துன்பம் தாங்கும் வேர்கள்
சொல்ல முடியாது அவள் மகிமை
சொல்லி முடியாது அவள் பெருமை
கருவில் சுமந்த பெண்ணினமே
உன் ஈகை இன்று நினைக்கின்றேன்.

அடர்ந்த இருளின் நந்தவனத்தில்
படர்ந்த அன்பின் தொப்புள் கொடியே!
உறங்கா விழிகளில் உறையா கனவுகள்
கண்ணீர் துடைக்குது உலகின் கைகள்
இன்று பெண்மை போற்றும் திருவிழா
ஆணின் கண்ணின் கண்ணீரின் பெருவிழா

நான்கு வேதங்கள் சொல்லாத
அன்பின் பாதையும்
பெண்ணே!உன் கருவறை
கற்றுக் கொடுக்கிறது
உயிர்களின் வாழ்க்கையில்

அழகில்லாமல் பிறந்தால் கூட
திருஷ்டி போட்டு வைப்பாள்
எழமுடியாமல் கிடந்தால் கூட
உடலை சுத்தம் செய்வாள்
கரு சுமந்த பெண்ணெல்லாம்
கண் கண்ட தெய்வம் என்று
உணர்கிறேன். வாழ்க்கை பெண்
எனும் உயிரில் சுவாசிப்பதால்

பிறப்புறுப்பை கிழித்து
பிறப்புரிமை தந்தாய்
இறப்பு வந்து எதிர்த்தும்
பாலூட்ட வந்தாய்
கல்லைக் கட்டி சிறுதூரம்
கடக்க முடியாத ஆணினமே!
உன்னை சுமந்த பெண்ணின்
மகிமை எப்போது அறிவாய்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Mar-16, 1:10 pm)
பார்வை : 1218

மேலே