அம்மா

முள் குத்தி
இரத்தம் வடிய
ஓடி நின்ற காலு

வலி நெடுக வலியோடு
நொண்டி நொண்டி
இடம்பெயர

யாருமே கேட்கத்தான்
செய்தனர்
என்னடா ஆச்சு காலுக்கு என்று

ஆனால்

அவள் மட்டும் தான்
என்னசாமி ஆச்சு என்று
பரிவோடு அவன் வலியை
அவள் மடியில் தாங்கினாள்

அன்று புரியவில்லை
அவனுக்கு

இன்றோ
நினைத்து எழுதுகிறான்

தாயின் ஒப்பற்ற
கருணைதனை் ்்்

எழுதியவர் : செந்தில்குமார் (7-Mar-16, 8:48 am)
Tanglish : amma
பார்வை : 168

மேலே