எங்கே செல்கிறது மனம்
பிரபஞ்சத்தின் வெற்றிடம்
அறியாது தேடுகிறாய்,
ஜனத்திரள் நடுவே ஓடுகிறாய்,
ஏன் எதற்கு எங்கே எப்படி என்றே
அறிந்து கொள்ள துடிக்கிறாய்!
குருவே சரணம் என்பாய்,
குருவாக ருதுவானவன் என்பது மறியாது
ஒவ்வொருவரையும் குருவாக்கிகொள்கிறாய்!
உன்னுள் ஒரு சக்தி ஊற்றாகிக்கிடப்பதை
எபபோதுணர்வாயோ அதுவரை
உன் தேடலில் துடிக்கிறாய், துவள்கிறாய்,
அரற்றுகிறாய், பிதற்றுகிறாய்.!
மந்திரம் சொல்லிக்கொண்டு
மயக்கத்தில் யாசிக்கிறாய்;
தியானம் என்கின்ற யோகத்தை
ஏற்றுக்கொண்டு நானும்
எல்லோரையும் போல்
ஏற்புடையவனாக இருக்கிறேனா?
என்று யாகம் செய்கிறாயே,
இதில் தான் நீ உன்னிலிருந்து
சிவனை அடைகிறாயா?
கூடு விட்டு கூடு மாறிப்போவது தான்
வாழ்க்கை என்றால் மேலை நாட்டில்
மாந்தர் எல்லாம் திரிகிறார்களே,
சொந்தம் விட்டு பந்தம் விட்டு
சொர்க்கம் என்ற ஒன்றை தேடி
உழல்வது தான் யோகமென்று!
யோகிகளால் அடையப்பெறும் ஆனந்தம் எது?
பிரம்மத்தில் சஞ்சரிப்பது மட்டுமே
சுயமெனும் தடைகளிலிருந்து
தன்னை உயர்த்தி இறையிடம் ஏந்துவதோ?
யோகியாக்கி உன்னிடமிருந்து நீ
பிரிந்து சென்று உற்று நோக்கினால்
தடைகள் என்பதெல்லாம்
ஐம்பூதங்களின் விளையாட்டே
என்பதையும் நீ அறிவாய்!
காலம் உன்னுடன் விளையாடுவது
உனக்கு பிடிக்கவில்லை,
அதனால் தானோ
இறையை தேடி இறைஞ்சுகிறாய்?
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத்தங்கமே!
(சிவராத்திரி பற்றிய என் பதிவு - சுயபரிசோதனை)