அப்பா

துணிவு என்றொரு வார்த்தை சொல்லி
தந்தது யாரம்மா
தந்தை தானம்மா - நல் வாழ்க்கை
தந்தவர் தானம்மா

எமனே எதிரில் வந்தாலும்
எதிர்த்து நிற்ப்பேனே
என் தந்தை என்ற வாளை நெஞ்சில்
ஏந்திக்கொண்டு எவரையும் வெல்வேனே

விழுகின்ற நேரமெல்லாம்
எழுவாய் என் மகனே என்று
எனை பார்த்து நீ சொன்னால்
எழுந்தோடுவேன் நான்

பையினிலே பணமுமில்லை
பையனுக்கது தெரியவுமில்லை
பார்க்கின்ற பொருளையெல்லாம்
கேட்டுனை துளைத்தேனே

எல்லாமாக என் வாழ்வில் நீ இருப்பதால்
எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாமல்
எல்லை கடந்து வந்து பாலை தேசத்தில்
பணம் படைத்த பிச்சைக்காரனாகி விட்டேன்

போதும் இந்த பாலைவாசம்
புறப்படுகிறேன் தேவை உன் நேசம்
என்று நான் சொன்னால்
பொறு மகனே கொஞ்ச மாசம்
வாழ்க்கைக்கு தேவை கொஞ்சம் காசும்
என்று சொன்ன உன் பாசம்
எந்த பூவும் கொடுக்காத புது வாசம்

எனக்கு மட்டும் கால இயந்திரம் கிடைத்துவிட்டால்
எல்லையற்ற மகிழ்ச்சியடைவேன்
சுழற்றிடுவேன் பின்னோக்கி
என் பிள்ளை பருவம் நோக்கி அல்ல
எந்தையின் பிள்ளை பருவம் செல்வேன்
என்னென்ன கிடைக்கவில்லையோ
எல்லாவற்றையும் கிடைக்க செய்வேன்.....

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (7-Mar-16, 10:28 pm)
Tanglish : appa
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே