களிறாக நடைபோடு

களிறாக நடைபோடு!

ஆயிரமாயிரம்
அற்புத சாதனை
புரிந்தீர்கள்!
அதிலொரு சாதனை
இதுவென
அழுகின்றாயோ ?

அகிலத்தின்
கவனத்தை
திருப்ப
அரிமாவாக எழு!

கண்ணீரால்
கழுவுவதை
நிறுத்தி விட்டு
களிறாக நடைபோடு

நாளைய உலகம்
உன்றன் கையில்
நானிலம் போற்றிட
பாடுபடு !

எழுதியவர் : கே. அசோகன் (7-Mar-16, 7:42 pm)
பார்வை : 103

மேலே