மை

அரசன் இங்கே அடிமையானான்
ஆட்சி இங்கே மாண்டுபோனது
இரப்பதெல்லாம் மக்கள் மேலே
ஈந்து வாழ்ந்த நம் குலம் எங்கே
உண்மை வாழ்வை
ஊனமாய் ஆக்கினோர்
எம்மிடம் வந்து என் இனம் கொன்று
ஏளனம் பேசினோர்
ஐயம் அறவே இன்றி
ஒரு விரல் மைக்காக
ஓநாய் மனிதர்களாய் வருவோனை
ஔடதமாய் அழிப்போமே! அழிப்போமே!

எழுதியவர் : முகமது மதார் சாஹிப் இ.க. (8-Mar-16, 8:28 am)
Tanglish : mai
பார்வை : 743

மேலே