அகரம்
மருதாணி வைத்த கை
தான் என் நிலை
நீ இல்லாமல்
இருந்தும் செயலற்று போய்...
உயிர் இருந்தும் உபயோகமில்லாமல்... (பயனற்று போய்...)
முன்னுரையில் நீ இல்லையடா.
முடிவுரையில் நீ வேண்டும்...
நீ மட்டும் வேண்டுமடா..
நாட்காட்டியாய்
நான் மாற வேண்டும்
ஆரம்பமும் முடிவும்
உன் கையினாலே..
டிசம்பரிலிருந்து
ஜனவரியாய்
நாம் இருக்க வேண்டும்..
ஜனவரியிலிருந்து
டிசம்பர்
தூரம் என்னை
தூள் தூளாக்குகிறதடா..
போர்களத்திற்கு
செல்ல ஆயத்தமாகும்
உனை - மனதில்
மறிக்கும் பொழுதே
நான் மரித்து போகிறேன்...
என்னையும்
அழைத்துச் செல்லக் கூடாதா..
(வீர தமிழச்சியாய் இருந்த போதிலும்
உனை போருக்கு
அனுப்பி வைத்து விட்டு
என்னால் இங்கு
ஜீவித்திருக்க முடியவில்லை..
உன் மார்பின்
கவசங்களாய்
நான் மாறி
உன் மடியிலேயே
இந்த உயிர் போகக்கூடாதா (போக வேண்டும்)..
உனக்காகவே இந்த உயிர்..
எதிரியின் வேலை
சரியான வேளையில்
நான் ஏந்த வேண்டும்..
அதற்காக கூட்டிச் செல்..)
~ பிரபாவதி வீரமுத்து