முஹம்மது மதார் சாஹிப் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முஹம்மது மதார் சாஹிப் |
இடம் | : கடலூர் துறைமுகம் |
பிறந்த தேதி | : 20-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 6 |
நான் தமிழ் நாட்டம் கொண்ட மாணவன்.
ஒரு நாளைய கனவு
மீண்டும் ஏனோ துளிர்ப்பதில்லை
முதல் நாளைய கனவிற்க்கு
மனம் ஏங்கிக் கொண்டு தான்
காலம் கழிகின்றது.
சில உறவுகள் கூட நினைவினில்
மின்னத்தான் செய்கிறது.
உடைந்த கண்ணாடி சில்லுகள்
மீண்டும் ஒட்டுவதில்லை.
ஏனோ சிலர் உள்ளமும் கூட.
வாட்டி வதைக்கும் நேரத்தில் கூட
சில நினைவுகள் மட்டும்
மனதை ஆற்றுகின்றன.
மனிதர்களை விட நினைவுகளுடன்
வாழ்கை நகர்ந்து கொண்டே செல்கிறது.
காய்ந்த சருகுகள் கூட நினைவினில்
இனிக்கவே செய்கின்றது. என்றும்
நினைவுகள் ஏமாற்றுவதில்லை!
அரசன் இங்கே அடிமையானான்
ஆட்சி இங்கே மாண்டுபோனது
இரப்பதெல்லாம் மக்கள் மேலே
ஈந்து வாழ்ந்த நம் குலம் எங்கே
உண்மை வாழ்வை
ஊனமாய் ஆக்கினோர்
எம்மிடம் வந்து என் இனம் கொன்று
ஏளனம் பேசினோர்
ஐயம் அறவே இன்றி
ஒரு விரல் மைக்காக
ஓநாய் மனிதர்களாய் வருவோனை
ஔடதமாய் அழிப்போமே! அழிப்போமே!
அரசன் இங்கே அடிமையானான்
ஆட்சி இங்கே மாண்டுபோனது
இரப்பதெல்லாம் மக்கள் மேலே
ஈந்து வாழ்ந்த நம் குலம் எங்கே
உண்மை வாழ்வை
ஊனமாய் ஆக்கினோர்
எம்மிடம் வந்து என் இனம் கொன்று
ஏளனம் பேசினோர்
ஐயம் அறவே இன்றி
ஒரு விரல் மைக்காக
ஓநாய் மனிதர்களாய் வருவோனை
ஔடதமாய் அழிப்போமே! அழிப்போமே!
முனிவனும் முட்டாளவான்
பெண்னணின் பார்வையிலே
கடவுளும் கட்டுப்படுவான்
அன்பின் காதலிலே
காதலும் குறையும்
காமப் பார்வையிலே
அன்பும் பெருகும்
இருவரின் பிரிவினிலே
பிரிவின் அழுகையும் போனது
உந்தன் அனைப்பினிலே
பேசி நேரம் போனது
உந்தன் பரிவினிலே
பரிவின் ஆழம் அறியுமோ காதல்
பிரிவின் நேரம் குறைத்தது ஊடல்
கரியின் காலிளிட்ட முயலானேன்
காதல் மோகத்திலே.
மோகம் குறைந்தது உந்தன்
காதல் பேச்சினிலே
கரிய மேனகையோ நீ
கார் கூந்தல் பேரழகியோ
பேரன் பெற்ற பின்னும்
பூலோகம் உன்னை மறைத்த
பின்னும் உன் மேற்கொண்ட
காதல் குறையவில்லை பேரழகியே..