காதல் பிரிவு

முனிவனும் முட்டாளவான்
பெண்னணின் பார்வையிலே
கடவுளும் கட்டுப்படுவான்
அன்பின் காதலிலே
காதலும் குறையும்
காமப் பார்வையிலே
அன்பும் பெருகும்
இருவரின் பிரிவினிலே
பிரிவின் அழுகையும் போனது
உந்தன் அனைப்பினிலே
பேசி நேரம் போனது
உந்தன் பரிவினிலே
பரிவின் ஆழம் அறியுமோ காதல்
பிரிவின் நேரம் குறைத்தது ஊடல்
கரியின் காலிளிட்ட முயலானேன்
காதல் மோகத்திலே.
மோகம் குறைந்தது உந்தன்
காதல் பேச்சினிலே
கரிய மேனகையோ நீ
கார் கூந்தல் பேரழகியோ
பேரன் பெற்ற பின்னும்
பூலோகம் உன்னை மறைத்த
பின்னும் உன் மேற்கொண்ட
காதல் குறையவில்லை பேரழகியே..