முத்தத்திற்கான ஆயத்தம்
முத்தம் நிகழ்வைவிட,
அதற்கு ஆயத்தமாவது,
அத்தனை அழகு..!
முதல் முத்தம்,
எப்படிக் கொடுக்கலாம் ?
பாரத்தவுடன்,
இதழோரம் புன்னகைத் தவழுமே,
அந்த சமயம் ?
இருக்கையை சுரண்டிக்கொண்டே
விழிகளை கட்டியணைப்பாளே
அந்த சமயம் ?
எதேச்சையாக விரல்களை தொட்டவுடன்,
மின்சாரம் பாயுமே,
அந்த சமயம் ?
அலைபேசியை பாரக்கும்நொடியில்,
தோள்கள் உரசிக்கொள்ளுமே,
அந்த சமயம் ?
ஏதுமறியாக் குழந்தையைப்போல,
அடிக்கடி முகபாவணைகளை மாற்றிக்கொள்வாளே,
அந்த சமயம் ?
தொடும் தூரத்திலிருந்தாலும்,
தொடாமலே கட்டியணைப்பாளே,
அந்த சமயம் ?
.
.
.
முத்தம் நிகழ்வைவிட,
அதற்கு ஆயத்தமாவது,
அத்தனை அழகு..!
அவஸ்தையானதும் கூட..!!

