நினைவுகள் ஏமாற்றுவதில்லை

ஒரு நாளைய கனவு
மீண்டும் ஏனோ துளிர்ப்பதில்லை
முதல் நாளைய கனவிற்க்கு
மனம் ஏங்கிக் கொண்டு தான்
காலம் கழிகின்றது.

சில உறவுகள் கூட நினைவினில்
மின்னத்தான் செய்கிறது.
உடைந்த கண்ணாடி சில்லுகள்
மீண்டும் ஒட்டுவதில்லை.
ஏனோ சிலர் உள்ளமும் கூட.

வாட்டி வதைக்கும் நேரத்தில் கூட
சில நினைவுகள் மட்டும்
மனதை ஆற்றுகின்றன.
மனிதர்களை விட நினைவுகளுடன்
வாழ்கை நகர்ந்து கொண்டே செல்கிறது.

காய்ந்த சருகுகள் கூட நினைவினில்
இனிக்கவே செய்கின்றது. என்றும்
நினைவுகள் ஏமாற்றுவதில்லை!

எழுதியவர் : முகமது மதார் சாஹிப் (9-Mar-16, 8:12 am)
பார்வை : 993

மேலே