தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து29---ப்ரியா
கீது வீட்டிற்கு சென்றதும் ரியா பார்த்த முதல் முகம் வந்தனா?????
ரியாவைப்பார்த்ததும் வந்தனா வெட்கி தலைகுனிந்து நின்றாள், நான் வேணும்னு பண்ணலடி என்னை மன்னித்துவிடு என் காதலன் பிரதீக்குக்காகதான் அப்படி நடித்துவிட்டேன் உன்னை மாட்டிவிடும் எண்ணம் எனக்கில்லை, உன்னை இங்கு பார்க்கலாம் என்றுதான் வந்தேன் இப்பொழுது கீது சொன்னபிறகுதான் நடந்தது அனைத்தும் தெரிந்து கொண்டேன் என்னை மன்னித்துவிடு என்று ரியாவின் காலில் விழுந்தாள் வந்தனா....????
அவள்மீது முதலில் கோவமிருந்தாலும் கீதுவும் ரியாவும் அதை மறந்து விட்டு ஒருவரையொருவர் பார்த்தனர்....,
வந்தனாவை அணைத்துகொண்டாள் ரியா, கூடவே கீதுவும் சேர்ந்துகொண்டாள்.
உன்கிட்ட ஒரு உண்மை சொல்லணும்டி அதற்காகதான் இவ்வளவு தூரம் வந்தேன் என்று வந்தனா சொல்ல?தோழிகள் இருவரும் குழப்பத்தோடு வந்தனாவைப்பார்க்க?????
"பிரதீக்கும் வசந்தும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல உறவுக்காரங்களும்தான்.....சிறுவயதிலிருந்தே வசந்த் மிகவும் திறமைசாலியாக இருப்பவன் எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் அடுத்தவன் பொருட்களை அபகரிக்கும் எண்ணமோ பிறர் உழைப்பில் உல்லாசமாய் வாழும் எண்ணமோ இல்லை.....பெரும் பணக்காரனாய் இருந்தும் அதை எல்லாம் தவிர்த்து தானே தன் சொந்த முயற்சியால் இந்த அளவுக்கு உயர்ந்தவன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வந்தனா அழுதுவிட்டாள்......
கண்களை துடைத்துவிட்டு மேலும் பேச ஆரம்பித்தாள்.....உண்மையிலே நான் முதலில் காதலித்தது வசந்தைதான் ஆனால் வசந்த் என்னை ஏறெடுத்துக்கூட பார்த்ததில்லை அவனுக்கு நான் அவனை காதலித்த விஷயமே தெரியாது.....அச்சமயம் தான் பிரதீக் என்னைக்காதலித்த விஷயம் அறிந்தேன்.....நாம் தேடி சென்று ஏமாறுவதைவிட நம்மை தேடி வரும் உறவை ஏற்றுக்கொள்வதே சரி எனப்பட்டது அதனால்தான் பிரதீக்கை காதலித்தேன்....பிரதீக் மிகவும் நல்லவனாய்த்தான் இருந்தான் ஆனால் வசந்த்க்கும் அவனுக்கும் வந்த சிறு தகராறில் அவனை முழுவதுமாய் பிரிந்தான் வெறுத்தும் விட்டான்......எவ்வளவோ முயற்சித்தும் இவனால் அவன் அளவுக்கு தொழிலில் முன்னேற முடியவில்லை அதற்காகதான் என் மூலம் இப்படி ஒரு விஷயத்தை செய்ய வைத்தான் என்று கண்ணீர் மல்க ரியாவின் கைகளை பிடித்து கண்களில் வைத்து கதறினாள் வந்தனா......!!
ஏற்கனவே உடைந்த நிலையில் இருந்த ரியா இன்னும் உடைந்து போனாள்....என்ன சொல்வதென்றே தெரியாமல் அவளும் அழுதுவிட்டாள்.
சரிடி எல்லாம் முடிந்து போய்விட்டது இனி அதைப்பற்றி பேசி ஒன்னும் ஆகப்போவதில்லை என்று இரு தோழிகளையும் தேற்றினாள் கீது.
பிறரை ஏமாற்றிவந்த பொருள் நிலைக்காது என்பது உண்மையே அதை இப்பொழுது நானும் பிரதீக்கும் புரிந்து கொண்டோம்.....உன்னைப்பார்த்து மன்னிப்பு கேட்க அவன்தான் என்னை அனுப்பி வைத்தான் என்றாள் வந்தனா...
நானும் பிரதீக்கும் திருமணம் செய்துகொண்டோம் என்று வந்தனா சொல்ல அவளது முகம் மிகவும் பிரகாசமாய் இருந்ததை வைத்து அவள் குடும்ப வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள் என்று புரிந்துகொண்டனர் தோழிகள்.....!
"நான் கஷ்டப்பட்டாலும் என்னால் என்தோழி நீ சந்தோஷமாய் இருக்கிறாய் இல்ல அது போதும்" என்று
ஆனந்தக்கண்ணீர் விட்டாள் ரியா???
ரியாவின் உணர்வு தோழிகள் இருவருக்குமே புரிந்தது!
சரிடி! நான் அவங்கக்கிட்ட சொல்லாம வந்துட்டேன் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ரியா.
அப்பொழுது வந்தனா தடுத்து "ஏய் கீது திருமணத்திற்கு வந்திடு "என்றாள்...?
ம்...என்று தலையசைத்துவிட்டு கிளம்பினாள் ரியா....!
ரியாவின் டயரியை படித்ததுமில்லாமல் இன்னும் சில முக்கியமான விஷயங்களையும் கண்டுபிடித்துவிட்டு ரியாவின் வரவிற்காகக்காத்திருந்தான் வசந்த்??
நொடிக்கொருமுறை வாசலையும் செல்போனையும் பார்த்து பார்த்து கண்கள் ஏமாற்றத்தில் களைத்து போனது.....
சிறிது நேரத்தில் ரியாவும் வந்துவிட்டாள்.
ஹாலில் ஆழ்ந்த சிந்தனையில் குழப்பத்தோடு கோவமாய் வசந்த் உட்கார்ந்திருந்த நிலையைபார்த்த ரியாவுக்குள் நிறையவே பயம் தொற்றிக்கொண்டது.......வழக்கத்தைவிட இன்று மிகவும் பயந்து பயந்து.....அன்னநடையிட்டு அவள் உள்ளே சென்றாள்.
வந்தனா வந்த விஷயத்தையும் அங்கு நடந்த விஷயங்களையும் சொல்லவா?இல்லை என்ன சொல்லலாம்?? வசந்து என்ன நிலையில் இருக்கிறான் என்றே கணிக்கமுடியவில்லை என்று மனக்குழப்பத்தோடு அவள் அருகில் வர.....அவளது முகப்பாவனையை வைத்தே ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட வசந்த்.....
ஏய்! நில்லுடி! எங்கே போறா?இங்க வா ....என்று அழைத்தான் வசந்த்????
தொடரும்.....!!