நாம ஜெயிச்சா வாரியத் தலைவர் பதவிகள் எல்லாம் எதிர்கட்சிக்காரங்களுக்குத் தான்

டேய் நம்ம கட்சி இந்தத் தேர்தல்ல வரலாற்றுச் சாதனை படைக்கப் போகுதடா?
#############
எப்பிடிடா?
#############
அம்மாவைத் தோக்கடிகறது தான் அவுங்க நோக்கம், குறிக்கோள்னு எல்லா எதிர்கட்சிக்காரங்களும் சொல்லறாங்க.
#####
ஆமாம். அப்படித்தாண்டா சொல்லறாங்க.
##############
சரி. அது உண்மையா இருந்தா எல்லாம் சேந்து கூட்டணி அமைக்கவேண்டியது தானே. ஏன் பிரிஞ்சு சின்னச் சின்ன துக்கடாக் கூட்டணிகளா நிக்கறாங்க. இதுல வேற நாந்தான் முதல்வர்னு சிலர் அறிவிச்சிருக்காங்க. அவுங்க சொல்லறதெல்லாம் உண்மை இல்லடா.

##########
என்னடா சொல்லற?

################
அவுங்கெல்லாம் மொத்தமாச் சேந்து கூட்டணி அமைக்காததே அம்மா ஜெயிச்சு மீண்டும் முதல்வராகணும்ங்கற அக்கறையிலதாண்டா. ஏன்னா துக்கடாக் கூட்டணிகளால் வாக்குச் சிதறல்கள் ஏற்படும். 1971 தேர்தல தி,மு.க 184 தொகுதிகளிலே ஜெயிச்சு சாதனை பண்ணிச்சு. அப்ப நம்ம கட்சி உருவாகாத காலம். அந்த வெற்றி வரலாற்றுச் சாதனையா இருக்குடா. இந்தத் தேர்தல் எதிர்கட்சிகள் அனைத்தும் தாமாக முன் வந்து வாக்குகளைச் சிதற அடிக்கப் போறதாலே எல்லாத் தொகுதிலயும் நம்ம கட்சி தான் ஜெயிக்கும். எதிர்கட்சி எம்.எல்.ஏ ஒருத்தர் கூட சட்ட மன்றத்தில் இருக்கப் போறதில்ல. நாம படைக்கப் போகும் வரலாற்றுச் சாதனையை உலகம் உள்ள வரைக்கும் எந்தக் கட்சியும் முறியடிக்க முடியாதடா.
###############
அப்ப என்னாகும்?
####################
எதிர்கட்சிகளுக்கு மண்ணாகும். போடா புண்ணாக்கு, அம்மா பரிதாபப்பட்டு ஒவ்வொரு எதிர்கட்சிக்கும் போனாப் போகட்டும்னு ஒரு வாரியத் தலைவர் பதவியைக் கண்டிப்பாத் தருவாங்க.
##############
இதெல்லாம் நடக்குமா?
#############
நடக்குமாவா? நடக்கப் போறதத்தாண்டா நாஞ் சொல்லிட்டு இருக்கறேன்,
######################
நடந்த நல்லது தான். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மாவின் ஆசியால் மழை பெய்ததுன்னு சொன்னாரில்லையா. அம்மா மீண்டும் முதல்வர் ஆனா மாதம் மும்மாரி கண்டிபபா பொழியப் போகிறது,

எழுதியவர் : மலர் (9-Mar-16, 3:47 pm)
பார்வை : 101

மேலே