பெரியவரின் தியாகம்
ஓர் மலையடிவாரத்தில், அழகிய கிராமம் இருந்தது. அக்கிராம மக்கள், மலை மீது வாழ்ந்துவந்த ஓர் பெரியவரின் அறிவுரைகளால் சிறந்து வாழ்ந்து வந்தனர். அம்மக்கள் கூட்டத்தில், அப்பெரியவரைப் பிடிக்காதவர்களும் இருந்தனர்.
ஒரு முறை, ஊரில் ஓர் திருவிழா நடந்தது. மக்கள் கூட்டம் திறண்டு, கோலாகலக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்பொழுது, மலை மீது வாழ்ந்த பெரியர், மலையின் மறு பக்கம் இருந்த கடல், சீற்றமடைவதைக் கண்டார். உடனடியாக, ஓர் தீப்பந்தத்தை எடுத்து, அவரது குடிசையை அவரே கொளுத்திக்கொண்டார்.
அப்பெரியவர் மீது அக்கறை உடையவர்கள், அவரது குடிசை எரிவதைக் கண்டவுடன், நிறைய வாலிகளில் நீர் எடுத்துக்கொண்டு, மலைமீதேறி, விரைந்து சென்று, தீயை அனைத்தனர். மலை உயரமாய் இருப்பதால், மலை மீது இருந்தவர்கள் சுனாமியிலிருந்து தப்பினர். அப்பெரியவர் மீது அக்கறை இல்லாதவர்கள், சுனாமியில் சிக்கித் தவித்தனர்.
அப்பெரியவரின் தியாகத்தால், அவரது நல்லோருக்கு நல்லது நடந்தது.
உட்கருத்து: 1. நாம் மற்றோருக்கு உதவினால், நமக்கு உதவி கிடைக்கும்.
2. உதவி உதவும்.