ஓமணப்பெண்-1 உண்மை காதல்

ஓமணப்பெண் ....1

என் கன்னத்தில் முத்தமிட்டு
இது தான் காதல் என்கிறாய்!!!...
நானோ உன் கைகளை
பிடித்துகொண்டு வாழ்ந்தாலே
போதும் என்கிறேன்...

உன் மூச்சும் என் மூச்சும்
உரசும்படி நெருங்கி வந்து
என்னை அனைத்து கொள்கிறாய்...
நானோ உன் கண் பார்வை
உரசலே போதும் என்று விலகி நிற்கிறேன்...

இப்படி நீ வேறு நான் வேறாய்
இருந்தாலும் நம் இருவர் காதலும்
உண்மை என்றே உணர்த்தி
உன்னில் வாழ்கிறது என் இதயம்
என்னில் வாழ்கிறது உன் இதயம்
நம் காதலை சுமந்தபடியே!!!...


ஹாய் பிரண்ட்ஸ், நீ வரும் வரை storya படிச்சு கமெண்ட், likes போட்ட எல்லாருக்கும் என்னோட தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்...காதல் எப்போ எந்த நிமிஷத்துல யார் மேல வரும்னு யாராலயும் சொல்ல முடியாது, சிலருக்கு வருஷ கணக்கா ஆகலாம், சிலருக்கு பாத்த நிமிஷத்திலேயே வந்துடலாம்..சிலருக்கோ வராமலே போகலாம்...இப்படி காதல் இதுதான்னு யாராலயும் definition சொல்ல முடியாது, சில காதல் சேரும், சில காதல் சேராமலே போகும்...இது தான் நல்ல காதல், இது தப்பான காதல்னு சொல்ல முடியாது, காதல் இரு இதயங்கள் சார்ந்த விஷயம், அன்பு அன்பு அன்பு இது தான் அதுல இருக்க தாரக மந்திரம்...இப்படி நான் காதல பத்தியே இவ்ளோ சொல்ல காரணம் காதல மையமா கொண்ட ஒரு கதைய தான் நானும் சொல்ல போறேன்...சொல்ல போனா இது கதை இல்ல என் நண்பரோட நண்பர் வாழ்க்கைல உண்மையா நடந்த sweet memories தான், சோ இது என் கற்பனை இல்ல, உண்மை காதல் ....இதுல சில விஷயங்கள் கற்பனை சம்பவங்களா இருந்தாலும் இந்த காதல் உண்மை தான்....காதல நேசிக்கிற உங்க ஆதரவு இருக்கும்னு நம்பி இவங்க காதல பத்தி சொல்ல ஸ்டார்ட் பண்றேன்....once again thanks to all ...



என்னோட பேரு மோகன்...இன்னைக்கு தான் நான் இந்த காலேட்ஜ்ல சேர்ற முதல் நாள்...என்னோட துக்க நாள்னு கூட சொல்லலாம்....எல்லாரும் ஆர்வமும், சந்தோஷமுமா காலேட்ஜ் வரும்போது எனக்கு மட்டும் வெறுப்பா இருக்கு....

திரும்பற பக்கம் எல்லாம் எனக்கு எரிச்சல் கிளப்பற மாதிரி தான் எல்லாம் நடக்குது, பிடிக்காத ஒரு விஷயத்த பண்ணும்போது என்ன தான் அங்க சூப்பரா இருந்தாலும் மனசு என்னமோ வெறுமையா தான் இருக்கு...

அந்த பக்கம் சீனியர்ஸ் நியூ கம்மர்ஸ ராக்கிங் பண்ணிட்டு இருக்காங்க....அவங்கள்ள ஒருத்தன் என்ன கூப்டரமாதிரி தெரியுது, அவங்களுக்கு நேரம் சரி இல்லன்னு நினைக்கிறேன்..நான் இருக்க கோவம், எரிச்சல்ல என்ன கலாய்க்கிற எவனும் உருப்படியா கிளாஸ்க்கு போக மாட்டான்....அவங்கள ஒரு கை பாக்கலாம்னு தான் கிட்ட போனேன், அதுக்குள்ளே அங்க ப்ரோபசர் வர்றத பாத்துட்டு எல்லாரும் பயந்து போய் இடத்த காலி பண்ணிட்டாங்க....தப்பிச்சிட்டானுங்க...

கலர் கலரா கண்ணுக்கு குளிர்ச்சியா பொண்ணுங்க இருந்தும் யாரையும் பாக்கனும்னு தோணல...இங்க இருந்து வெளிய போனாலே போதும்னு இருக்கு...ஆனா என்னோட அப்பா இருக்காரே அவரால தான் இப்படி நான் இவ்ளோ அவஸ்த பட வேண்டியதா இருக்கு....சந்தோஷ் சுப்ரமணியம் படம் பாத்தா என் நிலைமை என்னனு உங்களுக்கே புரியும், அதுல வர அதே பிரகாஷ் ராஜ் செல்லம் மாதிரி தான் என் அப்பாவும், என்ன ஒரு விஷயம்னா என் அப்பாவுக்கு பிடிவாதம் ரொம்பவே அதிகம், படம் கடைசில கூட என் அப்பா திருந்த மாட்டாரு ...அவரோட பிஸ்னச பாத்துக்க தான் இப்படி என்ன ரெடி பண்ணிட்டு இருக்காரு, ஆனா எனக்கு இதுல சுத்தமா விருப்பமே இல்ல...அவரோட விருப்பத்த எதிர்க்க முடியாம தான் நான் இன்னைக்கு காலேஜ்க்கு வர வேண்டியதா போச்சு...

சரி வந்தது வந்தாச்சு கிளாஸ்க்கு போய் உட்காருவோம்னு கிளாஸ் கண்டுபிடிச்சி கடைசி பெஞ்ச்ல போய் உட்காரவும் செஞ்சிட்டேன்....எந்த மூஞ்சையும் பாக்க பிடிக்கல, நெருப்பு மேல இருக்க மாதிரி இருக்கு...என் பீலிங்க்ஸ் தெரியாம எல்லாரும் ஹாப்பியா கலாட்டா பண்ணிட்டு இருக்காங்க, கிளாஸ் பாட்டுக்கு நடக்குது...ரெண்டு பீரியட் முடிஞ்சிருச்சு இதுக்கு மேலயும் என்னால உட்கார முடியும்னு தோணல...

எல்லாரும் இருக்காங்க, கிளாஸ் நடந்துட்டு இருக்கு...இன்னைக்கு காலேட்ஜ் பர்ஸ்ட் நாள், நான் இப்போ வெளிய போனா எல்லாரும் என்னையே பாப்பாங்கன்னு தெரியும், இருந்தாலும் அத பத்தி எனக்கு கவலை இல்ல, இதுக்கு மேலயும் என்னால இங்க இருக்கவே முடியாது...நான் வெளிய போக போறேன்...யார் என்ன நினச்சாலும் சரின்னு நான் வெளியவும் வந்துட்டேன், இப்போ நேரா பிரின்சிபல தான் பாக்க போறேன்...

மே கமின் சார்...

எஸ், கமின் ...

சார், நான் மோகன்... இந்த காலேட்ஜ்ல புதுசா ஜாயின்ட் பண்ணிருக்கேன்...நியூ அட்மிஷன்....

ஓகே, இப்போ என்ன ப்ராப்ளம், சீனியர்ஸ் ராகிங் பண்றாங்களா? இல்ல வேற ஏதாவது ப்ராப்ளமா? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு....

எனக்கு டிசி வேணும்....

என்ன டிசியா?????

ஆமா சார், எனக்கு இங்க படிக்க விருப்பம் இல்ல...இது என்னோட அப்பாவோட விருப்பம்...அதுக்காக இதுக்குமேலயும் என்னால விருப்பமில்லாம இங்க இருக்க முடியாது, ப்ளீஸ் எனக்கு டிசி குடுத்துருங்க சார் ....

இங்க பாருப்பா அவசரபடாத, இன்னைக்கு தானே காலேட்ஜ் பர்ஸ்ட் டே, கொஞ்சம் பொறுமையா இரு.. இன்னும் ஒரு வாரம் பாரு...அப்பவும் நீ டிசி வாங்கற முடிவுல இருந்தா அப்போ என்கிட்டே வா, நாம இத பத்தி பேசலாம் ....

இதுக்கு மேலயும் பிரின்சிபல் கிட்ட பேசமுடியாது, வேற வழியே இல்ல..இன்னும் ஒரு வாரத்துக்கு அப்புறம் வந்து டிசிய வாங்கிக்கலாம்னு நினைச்சிகிட்டு கிளாஸ்க்கு போனேன்...

நான் போகும் போதும் வரும்போதும் என்ன ஆச்சரியமா பாத்தாங்களே தவிர வேற எதுவும் என்கிட்டே பேசல....மறுபடியும் பழையபடி சோகமா கடைசி பெஞ்சுல போய் உட்காந்தேன்...

அப்படியே கொஞ்ச நேரம் போச்சு....

கூச்சலும் கும்மாளுமுமா இருந்த கிளாஸ் அப்படியே ஒரு நிமிஷம் சைலென்ட் ஆகிடுச்சு, தலைய நிமித்தி பாத்தேன்...

வைர கல்லா, நட்சத்திரத்தையே பேத்து எடுத்து செஞ்ச காலானு தெரியல அப்படியே ஜொலிட்ச்சது..அவ பாதம் பாத்த யாரும் அவ முகத்த பாக்காம மோட்சம் அடைய மாட்டாங்க....அப்படியே மயங்கி போய் அவ முகத்த பாத்தேன், முழுசா பொத்துனு விழுந்துட்டேன்....அவ கண்ணு ரெண்டும் ஆளையே கட்டி போடுற வசிய மீன்கள்...அவ உதடு இருக்கே, ஹப்பா அது உதடா இல்ல இல்ல...அத பத்தி சொன்னா எனக்கு நாலு நாளைக்கு கூட தூக்கம் வராது...இப்படி அவள வருணிச்சிட்டே போகலாம்....அப்படியே வயித்துக்குள்ளையும் இல்லாம தொண்டைக்குள்ளையும் இல்லாம எங்கயோ உருள ஆரம்பிச்சிடுச்சு காதல் பைத்தியம்...அந்த உணர்வ எழுதற அளவுக்கு இன்னும் வார்த்தைகள் எனக்கு பழகல...ஆனா முடிவு பண்ணிட்டேன் அவ தான் என் மணப்பெண்...


ஓமணப்பெண் ....

எழுதியவர் : இந்திராணி (9-Mar-16, 11:44 am)
பார்வை : 420

மேலே