லாலுப் பையன் வாலுப் பையன்

லாலுப் பையன் வாலுப் பையன்
========================================

ஏண்டியம்மா லாலுப் பையன் எங்கடி போயிட்டான்?
@@@@@@
ஏம்மா அவனைத் தேடற?
@@@@@@
இல்ல. அவனை ரொம்ப நேரமாக் காணமேன்னுதாங் கேக்கறேன். லாலுப் பையன் சரியான வாலுப் பையனா இருக்கறானே.
@@@@@@
அவன லாலு லாலுன்னு சொல்லாதம்மா. லால் –னு தான் சொல்லணும் அம்மா.
@@@@@
ஏண்டி லாலுங்கறது தமிழ்ப் பேரா? அவனுக்கு ஒரு நல்ல பேரா வைக்காம ஒரு இந்திப் பேர வச்சு நம்ம செம்மொழி தமிழையும் எஞ் செல்லப் பேரனையும் இழிவுபடுத்திட்டீங்களே. அது தான் உம்மேல எனக்குக் கோபம். சரி லாலுக்கு என்னடி தேன்மொழி அர்த்தம்.
@@@@@@@@
லால்-ன்னா சிவப்புக் கல் –னு அர்த்தம்மா. அத மாணிக்கம்-ன்னு சொல்லுவாங்க. அம்மா நான் தமிழ் இலக்கியம் படிச்சிட்டு பள்ளி ஆசிரியையா இருக்கறேன். ஆனால் தமிழர்கள்ல 90% அதிகமானவர்கள் அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேரத் தானே வைக்கறாங்க. ஊரோட ஒத்து வாழணும்னு தான் நாங்க எங்க பையனுக்கும் இந்திப் பேர வச்சோம்.
@@@@@@@
சரிடி தங்கம். தீபாவளி தமிழர் பண்டிகை இல்லன்னு சொல்லி நாங்க பட்டாசு வாங்கித் தராம, வெடி வெடிச்சு இயற்கைக்கும், மக்களுக்கும் பிற உயிரனங்களுக்கும் எடைஞ்சல் செய்யாம இனிப்பு , பலகாரம் மட்டும் செஞ்சு சாப்பிடச் சொல்லித் தானே உன்னையும் உந் தம்பியையும் வளத்தோம். உனக்குத் தேன்மொழின்னும் உந் தம்பிக்கு அறிவுநம்பின்னும் தமிழ்ப் பேரத்தானே வச்சோம். இதுக்கும் உங்கப்பா எழுதப் படிக்கத் தெரிந்த விவசாயிதான். நானும் எட்டாம் வகுப்பு வரை படிச்சவ தான். நீ தமிழ் ஆசிரியையா இருந்துட்டு உன்னோட ஒரே பையனுக்கு இந்திப் பேர வச்சிருக்கறயே அத நெனச்சா எனக்கு வெட்கமா இருக்குதடி மகளே தேன்மொழி.
@@@@@@@
என்ன மன்னிச்சிருங்கம்மா. பேர மாத்தறது ஒண்ணும் பெரிய செயல் இல்ல. ஒரு (Notary Public) வழக்குரைஞர்கிட்டச் சொன்னா அவரே அவம் பேர சட்டப்படி மாற்றி (Gazette) அரசிதழில் வெளியாவதை செய்வாரு. பையம் பேர ஒரு மாசத்துக்குள்ள மாத்தி நல்ல பேரா வச்சிடலாம். நீங்களே ஒரு நல்ல தமிழ்ப் பேராச் சொல்லுங்கம்மா.
@@@@@@
அவனுக்கு இளமாறன் –ன்னு உங்க தாத்தா பேரையே வச்சிருடி தேன்மொழி
*******************************************************************************************************************
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: விக்கிப்பீடீயா:
Lal (Persian: لعل‎‎, Hindi: लाल, Urdu: لال‎, Pashto: Lāl‎) is an Indo-Iranian surname and given name, which means "darling", from the Sanskrit lala ("cajoling").[1] In addition, Lal means "garnet" or "ruby" in Persian, "ruby" in Pashto, and "red" in Hindustani.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (8-Mar-16, 9:41 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 197

மேலே