ஒற்றிலா வெண்பா

உளமே நிறைய உயிரு முருக
வளமே யருள வருக ! -இளமயி
லாடநீ யேறி இனியவனே சேயோனே
மாடமதி லாடியே வா .


★ ஒற்று எழுத்துகளே இல்லாமல் அதாவது, புணர்ச்சியில் ஒற்றை மறைத்து, வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதைக் கருத்தில் கொண்டு முழுவதுமாய் ஒற்றில்லாமல் எழுத வேண்டும். இதுவே
‪#‎ஒற்றிலாவெண்பா‬ ஆகும்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Mar-16, 7:31 pm)
பார்வை : 100

மேலே