காதல் மேக கூட்டம்
காதல் மேககூட்டம்
வீதிகள் எங்கும் ஓடும்
விண்மீன்களின் கூட்டம்
செல்பேசியில் பாடும்
கண்ணே எந்தன் நெஞ்சம்
காதல்ராகம் தேடும்
கொஞ்சும் கிளிபோல உன் நெஞ்சில்
நான் பாடவா
வானவில் சேலையிலே
உன் விழியோரம் நான் ஆடவா
தோகைமயில் போல
உன் நெஞ்சில் தென்றலாய் நான் மோதவா
மஞ்சத்தில் என் நெஞ்சம்
மோகத்தில் கீதம் பாடும்
நாணத்தில் என் முகம் புது சுகம் மனம் தேடும்
உன்னோட நினைவுகள்
என் உயிராகி கீதம் பாடும்