குறிப்பு

உன் அருகாமைகளில் இருக்கிறது
நான் தேடி அலைந்த
போதி வனம்.....

மன முகடுகளில் எதிரொலிக்கும்
பட்சியின் குரல்
உன்னுடையவை ....

அகவலுக்கு கனிந்து
மண்ணிறங்கும் மழை போன்றது
நீ யாசகமிட்ட ஒற்றைப் பார்வை ....

உன் பாதத்தடங்களின்
நெரிசல்களால் அலங்கரிக்கப்பட்டது
என் மனதேசம் .....

இன்னும் நிறைய
இத்யாதி.....இத்யாதி.....
உன்னிடம் கேட்பதெல்லாம்
ஒன்றுதான்.....

என் நாட்களில்
நீயும் உன்னுடையவைகளும்
நானும் என்னுடையவைகளுமாக
மாறிவிட்டதை உனக்கு நான்
தெரிவிக்கும் பொழுதில்
இது வெறும் காதல் என்று
கடந்து விடாதே ......


- டயானா

எழுதியவர் : மேரி டயானா (9-Mar-16, 3:47 pm)
Tanglish : kurippu
பார்வை : 104

மேலே