வளர்த்த தீ

சந்திப்புக் கனவுகளை முழுமையாய்
எனக்குள் விதைத்துவிட்டு
சாதாரணமாய் என் அவஸ்த்தைகளை
உன்னால்மட்டும் எப்படி
இனிமையாய் ரசித்து நிற்க முடிந்திருக்கின்றது.

வாழ்க்கையே முடிந்துவிட்டதாய்
நான் உணர்ந்த அந்த
தருணங்களின் தடுமாற்றத்தினை
எங்கே நீ உணரப்போகிறாய்.

ஒவ்வொருமுறையும் நீ நடத்தும்
குழப்பங்களின் உச்சமல்லவோ இந்த
என் அவஸ்த்தைகள்.

காதலில் சாதலைப் போல்
முள்மதில் மேல் நடந்து கடந்த
நிலையினில் மட்டுமே உணர முடியும்
இந்த கணத்த மனநிலையை.

உன் மனநிலை
உணர்வுகளில் வைத்த தீ.
என் மனநிலை
மரணத்தின் ஒரு விளிம்பு.

எழுதியவர் : jujuma (16-Jun-11, 4:00 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : valartha thee
பார்வை : 296

மேலே