ஒவ்வொரு விடியலிலும் சூரியன் பிறக்கிறது

தேடல்கள் நோக்கியே
பூமி சுழல்கிறது
வாழ்க்கை சுகிக்கவே
நாட்கள் பிறக்கிறது
தடங்கள் மிதித்தும்
பாதை
அழகாகவே இருக்கிறது
ஒவ்வொரு விடியலிலும்
சூரியன்
புதிதாகவே
உதிக்கிறது
தோல்விகளில் பாடம்
கற்றுக் கொள்
தோல்விகளை
தூக்கிச் சுமந்து
விரக்திக்குள் உன்னைப்
புதைத்துக் கொள்ளாதே
வாய்ப்புகள்
உன் வாசலில் தான்
உன் அழைப்பிற்குக்
காத்துக் கிடக்கிறது
திடம் கொள்
தடம் காண்
திட்டம் செய்
எட்டித் தோடு
இந்த வானம் தான்
உனது தேசமும்
சூரியனுக்குப் போல் ...